Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பள்ளி மற்றும் கல்லூரியில் விளையாட்டு வீரர்களாக இருப்பவர்களுக்குக் கல்வி உதவித்தொகை

விளையாட்டு வீரர்களாக இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாயும், கல்லூரி, பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 13 ஆயிரம் ரூபாயும் கல்வி உதவித்தொகையாக வழங்குகிறது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். இந்த உதவித்தொகை பெற தற்போது விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் நாள்.

உதவித்தொகை

தேசிய அளவிலான போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு ஆணையங்கள் நடத்திய போட்டிகள், இந்தியப் பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் 2016-ம் ஆண்டு ஜூலை முதல் தேதி முதல் 2017-ம் ஆண்டு ஜூன் 30 தேதிக்குள் கலந்துகொண்டவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள், தனிப் பிரிவில் கலந்துகொண்டிருந்தால் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களாகவும், குழு போட்டிகளில் கலந்துகொண்டவர்களாக இருந்தால் முதல் இரண்டு இடங்களையும் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத்துடன் விளையாட்டுப் போட்டியில் பெற்ற சான்றிதழ்களின் நகலுடன் இணைக்க வேண்டும். விண்ணப்பத்தை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தை அந்தந்த மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement