Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியக் குடியரசுக் கட்சி போராட்டம்

இந்தியக் குடியரசுக் கட்சி சார்பாக சேலத்தில் தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவும், பழங்குடியின மக்கள் உரிமைகள் நிலை நாட்டவும் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே இன்று போராட்டம் நடைப்பெற்றது. இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தலித் மற்றும் பழங்குடியின மக்கள் கலந்துகொண்டார்கள்.


இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநிலச் செயல் தலைவர் கருமலை, ''சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியில் உள்ள குரால்நத்தம், சூரியூர் பழங்குடியின மக்கள் பல்லாண்டுகளாக நத்தப் புறம்போக்கில் 10 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு இன்றளவும் வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை. பட்டா கொடுக்கப்பட வேண்டும் என்று 2013-ல் கோப்புகள் தயார் செய்தும் இன்னும் பட்டா கொடுக்கப்படவில்லை.  


தும்பல்பட்டி கிராமம், நூலாத்துக்கோம்பை, அக்கரைக்காடு பகுதியில் வசிக்கும் 30 குடும்பங்களுக்குப் பாதை வசதி வேண்டி ஊராட்சி மன்றத்தின் மூலம் 6.7.2016-ல் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியும், பொதுமக்கள் பல மனுக்களைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் குழந்தைகள் பள்ளிக்குப் போக முடியாத சூழ்நிலையும், முதியவர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாத நிலையும் இருந்து வருகிறது. அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக இருந்து வருகிறது.


வேடப்பட்டி, நூலாத்துக்கோம்பை, அக்கரைக்காடு மஞ்சப்பாளி ஆகிய கிராமங்களில் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடியின மக்கள் அனுபவம் செய்து வரும் நிலத்திற்கு தீர்வை கந்தாயம் கட்டியும் அந்தத் தரிசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்காமல் இருந்து வருகிறார்கள்.


குரால்நத்தம் கிராமத்தில் சர்வே எண். 63 ஓடை புறம்போக்கு நீர்நிலையை ஆக்கிரமித்து வேலி அமைந்துள்ள தனியார் பஸ் உரிமையாளர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி 7.11.2016 முதல் தொடர்ந்து விண்ணப்பம் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு பணியில் இல்லாத இளவரசன் என்பவரை வைத்துக் கொண்டு அரசுக் கோப்புகளை எழுதுவது, வட்டாட்சியருக்கு வாகனம் ஓட்டுவது, எஸ்.டி., சாதிச்சான்று விண்ணப்பங்களை விசாரணை செய்து மனு ஒன்றுக்கு ரூ 1500 வீதம் லஞ்சப் பணம் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் இளவரசனை அலுவலகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இன்று போராட்டம் நடத்தி வருகிறோம்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement