Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்விட்டரில் கலாய்த்த இளைஞர்: பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ் 

மித்தாலி ராஜ்


கேப்டன் மித்தாலி ராஜ் தலைமையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, சமீபத்தில் நடந்துமுடிந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பியது. மித்தாலி ராஜ் விளையாட்டு மைதானத்தில் மட்டும் எதிரணிக்குச் சவால் கொடுப்பதில்லை, சமயத்தில் தன்மீது வரும் விமர்சனங்களுக்கும் சரியான பதிலடி கொடுப்பார். 
ஒருமுறை, பத்திரிகையாளர்கள் சந்திப்பில், “உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் யார்?”,  என்று கேள்வி கேட்டார் ஒரு பத்திரிகையாளர். அதற்கு மித்தாலி ராஜ், “இதே கேள்வியை நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரரிடம் கேட்பீர்களா?”, என்று பதிலடி அளித்தார்.
சமீப காலமாக, ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் மித்தாலி ராஜ், அவ்வப்போது தான் பங்குபெறும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்கிறார். அப்படி சமீபத்தில் பெங்களூரு கிரிக்கெட் அகாடமி திறப்புவிழா ஒன்றுக்குச் சென்றிருந்த மித்தாலி ராஜ், அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில்  பகிர்ந்திருக்கிறார். அதற்கு ட்விட்டரில் ஓர் இளைஞர், அந்தப் புகைப்படத்தில் மித்தாலிக்கு வியர்த்திருப்பதை குறிப்பிட்டு கேலியாகப் பதிவுசெய்திருக்கிறார். மித்தாலி, “நான் தற்போது இருக்கும் நிலைக்குக் காரணம், மைதானத்தில் வியர்வை சிந்தி உழைத்திருப்பதுதான்! அதனால், ஒரு கிரிக்கெட் அகாடமி திறப்புவிழாவில் எனக்கு வியர்த்திருப்பது பற்றி நான்  வெட்கப்படவேண்டியதில்லை”, என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement