Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாதிக்கப்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய திருச்சி கலெக்டர்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் எச்.ஐ.வி., புற்றுநோய், மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை திருச்சி மாவட்ட கலெக்டர் இராசாமணி  வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

மேலும் 5 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரே மாதிரியான அடையாள அட்டைகள், எச்.ஐ.வி., புற்றுநோய், மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்ட 18 நபர்களுக்கு தலா ரூபாய் 1000 வீதம் மாதாந்திர உதவித்தொகைக்கான  உத்தரவுகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட புற உலகச் சிந்தனை இல்லாத மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மாற்று வழியில் பிறருடன் தொடர்புகொள்ள உதவும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிறப்பு மென்பொருளுடன் கூடிய கையடக்க கணிணி ((Augmentative and alternative Communication System Device With Avaz Software)) உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய கையடக்க கணினி சிறப்புப் பள்ளிகளின் பயன்பாட்டுக்கு ஒரு கருவியும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உள்ள நடமாடும் சிகிச்சைப் பிரிவு வாகனத்தின் மூலம் முகாம் செல்லும்போது கிராமப்புற குழந்தைகளுக்குக் கற்றுத்தரும் வகையில் பயன்படுத்த ஒரு கருவி என இரண்டு கருவிகள் வழங்கப்பட்டன.

திருச்சி கலெக்டர்திருச்சி, அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், டவுன்ஹால் அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு மைய அமைப்பாளராகப் பணிபுரிந்த ஆர்.பரிமளா பணிகாலத்தில் இறந்ததை அடுத்து அவரின் மகன் ஆர்.சுரேஷ் என்பவருக்குக் கருணை அடிப்படையில் சத்துணவு மைய அமைப்பாளராக பணிநியமன ஆணையும்,  திருச்சி, பெரியமிளகுபாறை, புதுத்தெரு, காமராஜர் தெரு மற்றும் உலகநாத புரம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள் சிறப்பாக செயல்பட்டமைக்காக பி.எம்.கியூ.ஆர் (BMQR -Break Through Management Quality Register)  எனும் நிறுவனம் ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் வழங்கியுள்ளது. இதற்காக உழைத்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.

இன்றைய குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 499 மனுக்கள் பெறப்பட்டன.  மாவட்ட கலெக்டர் இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement