Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரியில் மணல் அள்ள நிரந்தரத் தடை விதிக்கவேண்டும்..! கரூர் மாவட்ட மக்கள் கோரிக்கை

ரூர் மாவட்டம், மாயனூர் தொடங்கி திருச்சி வரை உள்ள காவிரியில் மணல் அள்ள இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்மீதான விசாரணை வரும் 28-ம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், "இந்தத் தற்காலிக தடையை நிரந்தரத் தடையாக மாற்றி உத்தரவிட வேண்டும்' என்று கோரிக்கை வைக்க தொடங்கியிருக்கிறார்கள் கரூர் மாவட்ட மக்கள்.     

 
 

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வர்கள் சிலர், 'ஏற்கெனவே மணல் அள்ளுவதற்கு உயர் நீதிமன்றம் சொல்லியிருக்கும் உத்தரவுப்படி ஆற்றின் குறுக்கே தடுப்பணை இருந்தால், அங்கிருந்து 500 மீட்டர் தூரத்துக்கு மணல் அள்ளக் கூடாது. ஆனால், அந்தச் சட்டத்தை மீறி மணல் அள்ளிவருகிறார்கள். இப்படிக் கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் தடுப்பணை பாலங்கள் வழியாக இரவு, பகலாக லாரி லாரியாக மணல் திருட்டு நடைபெறுகிறது.

இதனால், கரூர் மாவட்டத்திலுள்ள தடுப்பணையும், காவிரி ஆறும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான் இப்படித் தடுப்பணை அருகில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று முசிறியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுத்தார். அதேபோல், தொட்டியம் சீலைப்பிள்ளையார் புதூரைச் சேர்ந்த தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ வடிவேல் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதைத்தொடர்ந்தே, கரூர் மாவட்டம் மாயனூர் தொடங்கி திருச்சி மாவட்டம் வரை காவிரியில் மணல் அள்ள தற்காலிகத் தடை விதித்தனர் நீதிபதிகள். அதோடு, இதுசம்பந்தமாக பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வரும் 28-ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. ஆனால், நீதிபதிகள் தற்காலிகத் தடை விதித்திருந்தாலும், கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஏற்கெனவே, கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓடும் காவிரியில் படிந்திருந்த எண்பது சதவிகித மணலைச் சுரண்டி அள்ளிவிட்டார்கள். மிச்சம் இருக்கும் மணலையும் அவர்கள் இந்த வேகத்தில் அள்ளினால் இரண்டே வருடங்களில் அள்ளி முடித்துவிடுவார்கள். அதனால், காவிரியின் போக்கே மாறிவிடும். அதனால், காவிரியைப் பாதுகாக்க வேண்டி நீதிபதிகள் கரூர் தொடங்கி திருச்சி வரை மணல் அள்ள விதித்திருக்கும் தற்காலிகத் தடையை நிரந்தரத் தடையாக மாற்றி உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் காவிரியை யாராலும் காப்பாற்ற முடியாது' என்றார்கள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement