வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (22/08/2017)

கடைசி தொடர்பு:07:39 (22/08/2017)

கோவையில் கடமான் கறியை வெட்டிய மூன்று பேர் கைது!

கோவை அருகே, கடமான் கறியை வெட்டி எடுத்த மூன்று பேரை வனத்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 

வனத்துறை அதிகாரிகள்

கோவை வனச்சரகம் மாங்கரை சரக பகுதியில், வனத்துறை அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செந்நாய்களால் கடித்து தின்றது போக மீதமிருந்த கடமான் கறியை, வெட்டி எடுத்த மூன்று பேரை, கையும் களவுமாக பிடித்தனர். அதன்படி, மாங்கரையைச் சேர்ந்த எஸ். அன்பழகன்,  என். முருகன், பி.ராமன்  ஆகிய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது, வன உயிரின குற்ற வழக்கு "WLOR 11/2017"  பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட வன அலுவலரால் அந்த மூன்று பேருக்கும் தலா ரூ. 10,000 வீதம் மொத்தம் ரூ. 30,000 அபராதம் விதிக்கப்பட்டது