Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அவர்கள் பதவி ஆசை பிடித்தவர்கள்... சொல்கின்றனர் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-கள்!

டந்த சில மாதங்களாக முட்டிக்கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இன்று இணைந்தன. இந்த இணைப்பில் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.கள் 18 பேர் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தியானத்தில் ஈடுப்பட்டனர்.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான பழனியப்பன் " இதற்கு பெயர் தான் தர்ம யுத்தமா? அவசர அவசரமாக கவர்னரை பார்த்து பதவியேற்ற இவர்கள் அ.தி.மு.க.வின் துரோகிகள். சில தினங்களுக்கு முன்பு வரை பழனிசாமியின் ஆட்சி ஒரு ஊழல் நிறைந்த ஆட்சி என்று பன்னீர்செல்வம் கூறிவந்தார். ஆனால் இன்று பழனிசாமியுடன் இணைந்துள்ளார். இந்த சில தினத்துக்குள் பழனிசாமியின் ஆட்சியில் ஊழல் குறைந்து விட்டதா? இது எல்லாம் மக்களை ஏமாற்றும் நாடகம். இவர்கள் அனைவரும் பதவி ஆசை பிடித்தவர்கள்" என்று கூறினார்.

பின்னர் பேசிய செந்தில்பாலாஜி "ஜெயலலிதா உருவாக்கிய இந்த கட்சியை அழிக்க வேண்டும் என்று பழனிசாமியும், பன்னீர்செல்வமும் நினைத்துவிட்டார்கள். அவர்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் முடிவு எடுக்க, இது என்ன அவர்களின் தனிப்பட்ட கம்பெனியா? பல கோடி தொண்டர்களுக்கு சொந்தமான கட்சி. ஜெயலலிதாவுக்கு இவர்கள் சதி செய்துவிட்டனர்" என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement