Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அம்பேத்கர் லட்சியங்களை நசுக்குகிறது பா.ஜ.க அரசு!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நேற்று சமுதாயக்கூடத்தில் மாலை 4 மணிக்கு  நடைபெற்றது.

'சமூக நீதியும் இடஒதுக்கீடும்' என்ற தலைப்பில் சந்திரபோஸ் மற்றும்  'அம்பேத்காரியம் நேற்று இன்று நாளை' என்ற தலைப்பில் மதிமாறன் பேசினர்.
இந்த கருத்தரங்கத்துக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த சி.பி.எம் மாவட்டச் செயலாளர் கந்தசாமி பேசும்போது, "பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 1000 நாள்கள் ஆகிறது. டாக்டர் அம்பேத்கர் லட்சியங்கள், சட்டதிட்டங்கள், ஜனநாயகக் கோட்பாடுகள் காலில் போட்டு மிதிக்கிறது. பா.ஜ.க. அனைத்து துறைகளில் காவி கும்பல் தாக்குதல்  நடத்தி வருகிறது. இம் மாவட்டத்தில் கலப்புத் திருமணம்,  கோயில்களில்  தலித்துக்களுக்கு  உரிமை மறுப்பு  சம்பவம் அரங்கேறி வருகின்றது. ஆர்.எஸ்.எஸ், அமித்ஷா, மோடி கூட்டணிக்கு ஒரு சில தலித் தலைவர்கள் உடந்தையாக இருக்கிறார்கள்" என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு ஆசிரியர் த.பாலகிருட்டிணன் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர்  ச.முருகையா, ஆசிரியர்  வெ.பாண்டி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் வே.மதிமாறன், தோழர்.பூ.சந்திரபோஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நிறைவாக இரா.இராதாகிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement