இன்று சென்னைக்கு  'ஹேப்பி பர்த்டே' #chennai378 #chennaiday #chennai #madras

 

 

 

சென்னை நகருக்கு இன்று 378-வது பிறந்தநாள். சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமுமாக விளங்கிறது. நவீனமும் பாரம்பர்யமும் கலந்து, பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாசாரம் திகழ்கிறது. மருத்துவம் தொடங்கி, பல துறைகளில் முன்னோடியாகத் திகழ்கிறது.

சென்னை

1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு, மாநிலத்தின் தலைநகரானது மதராஸ். நகரின் பெயரான மதராஸ், மெட்ராஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டுவந்தது. சென்னை மாநிலம் 1968-ம் ஆண்டு தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம்செய்யப்பட்டது. 1997-ம் ஆண்டு, மெட்ராஸ் என்பது சென்னை எனப் பெயர் மாற்றம்செய்யப்பட்டது.

பெயர் வந்த வரலாறு

சென்னை 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி உருவானதாக வரலாறு சொல்கிறது. அன்றைய தினம் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினர். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கர்.அவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் 1639-ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதைத் தொடர்ந்து சென்னை நகரம் உருவானது. 

விவேகானந்தர் இல்லம்

சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் 1639 ஆகஸ்ட் 22-ம் தேதியை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படும் தினமே சென்னை தினம். இந்த தினம் கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்பு மிக்க 'சென்னை தினம்' இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!