Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீட் விலக்கு அவசரச் சட்டத்துக்கு சிக்கல்?

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டம் தொடர்பாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் எதிர்மறை கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் பெற, தமிழக அரசு தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து, சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், நீட் தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வை ஆகஸ்ட் 22-ம் தேதி (இன்று) வரை நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

இந்நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டம், சட்டரீதியாக வலுவானது இல்லை என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால், அதேபோன்றதொரு கோரிக்கை மற்ற மாநிலங்களிடமிருந்தும் வரலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. தமிழக அரசின் அவசரச் சட்டம்குறித்து சாதகமான கருத்தை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியிருந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது இதுபோன்ற தகவல்கள் வெளியாகியிருப்பது மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement