Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’காட்டு யானையிடம் சிக்கி இறந்த பெண்!’ - சோகத்தில் கோவை!

கோவையில், காட்டு யானை தாக்கி ஒரு பெண் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யானை மிதித்த இறந்த பெண்

யானைகளால் மனிதர்களும், மனிதர்களால் யானைகளும் இன்னல்களுக்கு ஆளாவதும் மரணத்தைத் தழுவுவதும் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. இன்று காலை கோவை, போலாம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்ட படட்டியார் கோயில் பதி என்கிற இடத்தில் கூலித்தொழிலாளியான சாரதா என்பவரை காட்டு யானை மிதித்துக் கொன்றது.

அந்தப் பகுதியில் உள்ள பொன்னுசாமி என்பவரது தோட்டத்துக்கு அருகில்,  அதிகாலையில் இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 50 வயதான சாரதா, திருச்சியை அடுத்துள்ள குளித்தலையைச் சேர்ந்தவர். கடந்த வாரம், கூலி வேலைக்காக கோயம்புத்தூர் வந்திருக்கிறார். அதிகாலை என்பதால், யானை வந்ததை சாரதாவால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவரால் யானையிடமிருந்து தப்பவும் முடியவில்லை. வயதான அந்தப் பெண்மணியை உயிர் போகும்வரை யானை புரட்டி எடுக்க, துடிதுடித்து இறந்திருக்கிறார் சாரதா.

அந்தப் பகுதி மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், சாரதாவின் உடலை மீட்டு விசாரணை நடத்திவருகிறார்கள்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement