வெளியிடப்பட்ட நேரம்: 11:53 (22/08/2017)

கடைசி தொடர்பு:11:55 (22/08/2017)

ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு!

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

paneerselvam
 

ஜெயக்குமார் கவனித்து வந்த சட்டமன்றம், திட்டமிடல், தேர்தல் உள்ளிட்ட இலாக்காக்களை ஓ.பன்னீர்செல்வம் இனி கவனிப்பார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையைக் கவனிப்பார். 

நேற்று அணிகள் இணைப்புக்குப் பின்னர் புதிய அமைச்சரவை குறித்த செய்திக்குறிப்பை ஆளுநர் மாளிகை  வெளியிட்டது. புதிய அமைச்சரவையில் பன்னீர்செல்வத்துக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது. மேலும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். கூடுதலாக சட்டமன்றம், திட்டமிடல், தேர்தல் உள்ளிட்ட இலாக்காக்களையும் அவர் கவனிக்கவுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க