வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (22/08/2017)

கடைசி தொடர்பு:13:15 (22/08/2017)

105 ஆண்டுகளாக 'மாதவிடாய் விடுப்பு' அளிக்கும் அரசு பெண்கள் பள்ளி!

டந்த 105 ஆண்டுகளுக்கும் மேலாக, கேரளாவில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில், மாதவிடாய் நாள்களில் பெண்கள் விடுப்பு எடுப்பதற்கு அனுமதி வழங்கி வருகிறது.

கேரளாவிலுள்ள கொச்சினை அடுத்த திருப்புனித்தூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில், 1912-ம் ஆண்டிலிருந்து, மாதவிடாய் நாள்களில் ஆசிரியர்களும் மாணவிகளும் விடுப்பு எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுவருகிறது. ஒருவேளை, பொதுத் தேர்வின்போது மாணவிகளுக்கு மாதவிடாய் நாள்கள் எனில், அப்போதும் விடுமுறை அளித்து, அவர்கள் மாதவிடாய் முடிந்த பின்னர் அவர்களது தேர்வை எழுதுவதற்கு இந்தப் பள்ளி அனுமதிக்கிறது.

மாதவிடாய் விடுப்பு


மாதவிடாய் நாள்களில் பெண்கள் மிகவும் சோர்வாக உணர்வார்கள் என்பதால், அவர்களுக்கு விடுப்பு அளிக்கிறது பள்ளி நிர்வாகம். இது, அரசுப் பள்ளியாக இருந்தபோதிலும், அரசு விதிமுறைகளை மீறி பெண்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டுவருகிறது. ஏனெனில், 300 நாள்கள் மாணவிகளின் வருகைப்பதிவு இருக்க வேண்டும் என்பது அரசாங்க விதியாக இருந்தாலும், இந்தப் பள்ளியில் மட்டும் மாதந்தோறும் மாணவிகளுக்கு விடுப்பு வழங்கிவருகிறது.  

அனைத்துப் பள்ளிகளுக்கும் வழிகாட்டியாக இந்தப் பள்ளி 105 ஆண்டுகளுக்கும் மேலாக 'மாதவிடாய் விடுப்பு' என்கிற ஒரு திட்டத்தை நடத்திவருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க