Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எப்படி நடக்கிறது முத்தலாக்? - புள்ளி விவரங்கள் சொல்வது இதுதான்

முத்தலாக் முறையை ஆறு மாதங்களுக்கு ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம். அடுத்த ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் முத்தலாக் விவகாரத்தில் சட்டம் இயற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இஸ்லாமியப் பெண்களைக் கடுமையாக பாதிக்கும் முத்தலாக் விவகாரத்தை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது. மூன்று நீதிபதிகள் முத்தலாக்குக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டுள்ளனர். 'இஸ்லாமியப் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது' எனவும் 'அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது' என்றும் தங்கள் தீர்ப்பில் கூறியிருக்கின்றனர். 

 முத்தலாக்கிற்கு எதிரான போராட்டம்

2017-ம் ஆண்டு மார்ச் முதல் மே மாதத்துக்குள் விவாகரத்துப் பெற்ற 20,671 இஸ்லாமிய மக்களிடம்  (16,860 ஆண்கள், 3,811 பெண்கள்) நடத்திய ஆய்வில் முத்தலாக் கொடுக்கப்படுவதற்காக முக்கிய காரணிகள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டது. பெற்றோர்கள், உறவினர்கள் தலையீடு காரணமாக 13.27 சதவிகிதம், வரதட்சணை 8.41 சதவிகிதம், கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு 7.96 சதவிகிதம் குழந்தை இல்லாததால் 7.08 சதவிகிதம் நல்ல மனைவியாக நடக்கவில்லை எனக் கூறி 6.19 சதவிகிதம் கணவருக்கு வேலை இல்லாததால் 4.87 சதவிகிதம் , உடலுறவுக்கு ஒத்துழைக்காதது 4.42 சதவிகிதம், பிடிக்காத மனைவி 3.54 சதவிகிதம், பெண் குழந்தைகள் பிறப்பதால் 2.65 சதவிகிதம், மனைவி உடல் நலம் பாதிப்பால் 2.65 சதவிகிதம், கோபத்தில் 0.44 சதவிகிதம், மது அருந்தியதால் 0.88 சதவிகிதம், பிற காரணங்கள் 37.61 சதவிகிதம் எனத் தெரிய வந்துள்ளது. 

தலாக் அளிக்கும் முறை

மூன்று மாதத்தில் வீட்டின் மூத்தவர்கள் முன்னிலையில் மாதத்துக்கு ஒருமுறை தலாக் தெரிவித்து 36.2 சதவிகிதம் பேர் விவாகரத்துச் செய்கின்றனர். ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் 24.7 சதவிகிதம் நீதிமன்றம் வழியாக நோட்டீஸ் வழங்கி 21.1 சதவிகிதம், போலீஸார், ஊர் பஞ்சாயத்து வழியாக 16.9 சதவிகிதமும் ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லும் முறையில் 0.3 சதவிகிதமும் பிரிந்து செல்கின்றனர். இந்த தலாக் முறையில்தான் கணவன், மனைவி இருவருமே விருப்பத்துடன் குடும்ப பந்தத்தை முறித்துக் கொள்கின்றனர். 

முத்தலாக்குக்கு எதிராக போராடிய பெண்கள் 

உத்ரகாண்ட் மாநிலம் காஷிபூரைச் சேர்ந்தவர் 35 வயது ஷயாரா பானு. இவருக்கு இரு குழந்தைகள். 15 வருட குடும்ப பந்தத்தை கணவர் முறித்துக் கொண்டார். ராஜஸ்தானைச் சேர்ந்த 26 வயது ரெஹ்மானுக்கு 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்தார் கணவர். பெற்றோர் வீட்டில் இருந்த ரெஹ்மானை  ஸ்பீட்போஸ்ட் வழியாக கணவர் விவாகரத்துச் செய்தார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது பர்வீனுக்குத் திருமணம் முடித்த இரண்டே வருடங்களில் 10 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி கணவர் விவாகரத்து அளித்தார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜகானுக்கு 31 வயதுக்குள் நான்கு குழந்தைகள். 15 வருட குடும்ப உறவை ஒரே போனில் பேச்சில் முறித்தார் கணவர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சப்ரிக்கு இரு குழந்தைகள். இவருக்கு துண்டுத் தாளில் எழுதி கணவர் முத்தலாக் அளித்தார். 

இந்த ஐந்து பெண்கள்தான் முத்தலாக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடியவர்கள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement