Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு!

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வருவார்கள் என்ற தகவலை அடுத்து, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

அ.தி.மு.க. தலைமைக்கழகம்


அ.தி.மு.க அணிகள் இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் தினகரனுக்கு, 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவளித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ஆளுநர் வித்யாசாகர் ராவிடன் அவர்கள் தனித்தனியே கடிதம் கொடுத்தனர். மேலும், முதலமைச்சருக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், அவருக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் எம்.எல்.ஏ-க்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

 'சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்க, பொதுக்குழு கூட்டப்படும்' என்று கூறிய வைத்திலிங்கம் எம்.பி-யை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியதாக அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்தார். இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைமைக் கழகத்துக்கு தினகரன் ஆதரவாளர்கள் வரலாம் என்ற தகவலை அடுத்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அலுவலகத்தில் கூடியிருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, அங்கு பணிபுரிபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.     

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement