Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை!' - தூதரக அதிகாரி தகவல்

இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 83 பேரை விடுதலை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்தியத் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாக் நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைப்பிடித்துச் செல்லப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. தற்போது வரை இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 83 பேர் நீதிமன்ற காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 178 விசைப்படகுகளும் இலங்கை அரசின் பிடியில் உள்ளது.

 

தூதரக அதிகாரி நடராஜன்

இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு சிறைப்பிடிக்கப்பட்ட 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தப் படகுகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய மீனவர்கள், மீன் துறை அதிகாரிகள் அடங்கிய குழு கடந்த வாரம் இலங்கை சென்று வந்தது. விடுவிக்கப்பட்ட படகுகளில் 9 படகுகள் மீட்க முடியாத நிலையில் சேதம் அடைந்திருப்பதாக இலங்கை சென்று திரும்பிய மீனவர்கள் கூறியிருந்தனர். மேலும் விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்டு வர செப்டம்பர் மாதம் மீனவர்கள் குழு மீண்டும் இலங்கை செல்லவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இந்நிலையில் இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 83 பேரையும் விடுவிப்பதற்குத் தேவையான அழுத்தத்தினை இலங்கை அரசுக்குக் கொடுத்துள்ளதாகவும், இதன் மூலம் தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கையில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரி நடராஜன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement