ஓபிஎஸ் இணைந்தது போல தினகரனும் இணைக்கப்படுவார் - செல்லூர் ராஜு

ஓபிஎஸ் இணைந்தது போல தினகரனும் இணைக்கப்படுவார் என்று செல்லூர் ராஜு மதுரையில் இன்று பேசியது அனைவரையும் அதிரவைத்துள்ளது. செல்லூர்ராஜு ஒரு வார்த்தை பேசினாலும் அது பரபரப்புத்தான். 

மதுரை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் செல்லூர்ராஜு, '' விவசாயிகளுக்குக் கடனாக வழங்க 7000 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் மதுரை மாவட்டத்திற்கு மட்டும் 150 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2856 விவசாயிகளுக்கு 18.60 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 1. 29 கோடி வழங்கப்பட்டுள்ளது.

செல்லூர்ராஜு

மதுரை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி 43 கிளைகளுடன் விவசாயிகளுக்குச் சிறப்பான முறையில் உதவிவருகிறது'' என்று பேசிவிட்டு கிளம்பிய அமைச்சர் செல்லூர்ராஜுவிடம், ''தினகரன் அணியிலுள்ள எம்எல்ஏ-க்கள் எடுத்துவரும் நிலைப்பாடு பற்றி என்ன  சொல்கிறீர்கள்?'' என்றதற்கு, 
   ''கவர்னரைச் சந்தித்த 19 எம்எல்ஏ-க்களும் மீண்டும் எங்களுடன் வருவார்கள். ஓபிஎஸ் அணி இணைந்ததுபோல் தினகரனை இணைப்பதற்கான முயற்சிகளைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்வார், அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் விரைவில் எடுப்பார்'' எனக் கூறிவிட்டுச் சென்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!