Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செய்தியாளர்களின் கேள்வியும் பொன்னையனின் ஒரு வரி பதில்களும்!

.தி.மு.க.வின் இரு அணிகளும் சேர்ந்துள்ள நிலையில் எம்.ஜி.ஆர். காலத்து சீனியரான பொன்னையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. மொத்தமே நான்கு கேள்விகள்தான். நான்கிற்கும் பொன்னையன் அசராமல் அளித்த பதிலைப் பார்த்து மிரண்டு போன செய்தியாளர்கள், கேமராவையும், மைக்கையும் அடுத்த வி.ஐ.பி.யை நோக்கி நகர்த்தினர்.
 


பொன்னையன்


 அந்தக் கேள்விகளும் பதில்களும் இவைதான் :  
' சார், ஓ.பி.எஸ்ஸுடன் நீங்கள் இணைந்து நடத்திய தர்மயுத்தம் இந்த இணைப்பின் மூலம் வென்றிருக்கிறதா' ?
"தர்மயுத்தம் வென்றிருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்"

' சார், தொண்டர்கள், ஓ.பி.எஸ்ஸை  விரும்புகிறார்கள் என்று நேற்றுவரை சொன்னீர்கள். கட்சியின் இரண்டு அணிகளும்  இணைந்துள்ளன, இப்போது தொண்டர்கள் யாரை விரும்புகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்' 

"அதையும் நீங்கள்தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும் எங்களுக்குத் தெரியாது"'

சார், சசிகலாவைக் கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்தது என்ன ஆகும் ?' 

" கட்சியின் சட்ட திட்டத்தில் இப்படிப்பட்ட நியமனத்துக்கு இடமில்லாத ஒருவரை நியமித்ததை நீக்கப் பொதுக்குழுவுக்கு அதிகாரம் இருக்கிறது... அது நீக்கி விடும் !"

'சார், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில்  ஊழல் மலிந்து விட்டது என்று கடந்த வாரம்தானே உங்கள் அணியினர், ஓ.பி.எஸ். தலைமையில் போராட்டம் நடத்தினார்கள் ?'
 

"அதைப் பேசி சரி செய்து விட்டோம்" !

பேட்டி முடிந்தது...  மைக்குகளும் கேமராக்களும் அந்த இடத்தை விட்டு அகன்றன....

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement