Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் பழனிசாமியைத் தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி!

டிராபிக் ராமசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோரை பதவிகளிலிருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில்" ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக, தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரும் இடம்பெற்றுள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் இந்தியத் தண்டனைச் சட்டம் 420-ன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அமைச்சர் காமராஜ் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இவர்கள் மூவரையும் அவர்கள் வகிக்கும் பதவிகளிலிருந்து தகுதி நீக்கம் அல்லது இடைநீக்கம்செய்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக கவர்னருக்குப் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அவர்கள் மூவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்

இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தொடர்ந்துள்ள வழக்கில் போதுமான ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும், அரசின் உறுதித்தன்மையை நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் நிரந்தர கவர்னரை நியமிப்பது தொடர்பாக மனுதாரர் மத்திய அரசுக்கு எவ்வித மனுவையும் அனுப்பவில்லை. எனவே, வழக்கில் போதிய ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் சசிதரன் சுவாமிநாதன் அமர்வு உத்தரவிட்டது .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement