Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிலையன்ஸ் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு! ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

         

       

நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் டாஸ்மாக் கடையை மூடக் வேண்டியும் ரிலையன்ஸ் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா ஆவினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் பெருமளவுக்கு கலெக்டர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வந்திருந்த கிராம மக்கள் பேசும் போது, 'பல வருடங்களாக டாஸ்மாக் கடை எங்கள் ஊரில் செயல்பட்டு வருகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் பெண்கள் என யாரும் அந்தக் கடை வழியாகச் செல்ல முடியவில்லை. ஊருக்குள் டாஸ்மாக் கடை இருப்பதால் ஆண்கள் காலையில் எழுந்தவுடன் அந்தக் கடைக்குத்தான் செல்கிறார்கள். பெண்கள் கோயிலுக்குச் செல்லும் போது குடிபோதையில் இருக்கும் ஆண்கள் கேலி செய்கிறார்கள். பல ஆண்டுகளாகக் குடித்துவிட்டு இறந்து போனவர்கள் எங்கள் ஊரில் அதிகம். இதில் கல்லீரல், கிட்னி போன்ற பாதிப்புகளால் ஆண்கள் இறந்திருக்கிறார்கள். அந்தக் குடும்பம் ஆண் துணை இல்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறது. ஆகையால் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்.

அதே நேரத்தில் எங்க ஊர்; அங்கன்வாடி பள்ளிக்கூடம் மற்றும் கோயில் இருக்கும் இடத்துக்கு அருகாமையில் ஜியோ ரிலையன்ஸ் செல்போன் டவர் அமைக்கிறார்கள். இதனால் பள்ளிக்கூடம் கோயில் அருகாமையில் இந்த டவர் அமைக்கிறார்கள். குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் பறவைகள் எல்லாம் இந்த டவர்களால் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் ஆய்வு அறிக்கை வெளியிட்டிருப்பதை நாங்கள் சூட்டிக்காட்டியிருக்கிறோம். எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை ரிலையன்ஸ் செல்போன் டவர் இவை இரண்டையும் அப்புறப்படுத்தக்கோரி மனு கொடுத்திருக்கிறோம். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள்'' என்கிறார்கள் கிராம மக்கள்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement