Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரை-நாகர்கோவில் இரட்டை ரயில்பாதை பணிகள் - ரயில்வே அதிகாரி விளக்கம்

ரயில்வே அதிகாரி

மதுரை-நாகர்கோவில் இடையே இரட்டை ரயில்பாதை பணிகள் எப்போது தொடங்கும் என்பது தொடர்பாக தென்னக ரயில்வே அதிகாரி பதில் அளிக்க மறுத்து விட்டார். 

தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் நீனு இத்ரேயா, நெல்லை ரயில் நிலையத்தில் இன்று ஆய்வு செய்தார். ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பல்வேறு இடங்களும் சுகாதாரமாகப் பராமரிக்கப்படுகிறதா என்பது பற்றி அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’மத்திய ரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு ரயில் நிலையங்களிலும் ஆய்வு செய்து வருகிறேன். ரயில் நிலைய நடைமேடை, ரயில் பெட்டிகள் உள்ளிட்ட இடங்களைச் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஆய்வு நடக்கிறது. 

ரயில்வே அதிகாரி நீனு மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி மற்றும் மதுரை-மணியாச்சி-நாகர்கோவில் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் அமைப்பதற்கான திட்டம் எப்போது தொடங்கும் என்பதை ரயில்வே வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும். இருப்பினும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என நம்புகிறோம். செங்கோட்டை- புனலூர் இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் விரைவில் நிறைவடைந்து போக்குவரத்து தொடங்கும்.

மதுரை-நாகர்கோவில் இடையே இரட்டைப் பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த காலத்திலேயே நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், நாகர்கோவில் -திருவனந்தபுரம் இடையே பணிகள் தொடங்கவிருக்கின்றன. வாரியத்தின் ஒப்புதலுடன் பணிகளுக்கான டெண்டர் விடப்பட்ட நிலையில், மதுரை-நாகர்கோவில் பணிக்கு நிதி ஒதுக்கப்படவே இல்லை. இது குறித்த கேள்விக்கு மதுரைக் கோட்ட மேலாளர் நீனு இத்ரேயா பதிலளிக்க மறுத்து விட்டார்.    

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement