Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


 

ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர் கூட்டமைப்பினர் சார்பில் மாதந்தோறும் முறையான பென்சன் வழங்கிடவும், ஓய்வு பெறும் நாளில் வைப்புநிதி மற்றும் பணிக்கொடை, ஒப்படைப்புத் தொகை, விடுப்புச் சம்பளம், அரசு அறிவித்த நாளில் அகவிலைப்படி மற்றும் நிலுவையில் உள்ள அகவிலைப்படியைப் பெற்றிட முறையிடும் நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குச் சம்பளம் அதிகரிக்கப்படும் போதெல்லாம், அத்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியமும் அதிகரிக்கப்படுகிறது. ஆனால், மாநில அரசு, போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத்தில் மாற்றம் செய்ய முன்வருவதில்லை. எனவே, தமிழக அரசை, போக்குவரத்து ஊழியர்களின் பென்சன் திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் எனக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசுப் போக்குவரத்துக் கழகம் முன்பு ஓய்வு பெற்ற தொழிலாளர் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, 13-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடித்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் அமல்படுத்த வேண்டும்,  மாதம்தோறும் 1-ம் தேதி ஓய்வூதியம் தவறாமல் வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டம் ரத்து செய்ய வேண்டும், கடந்த 2012 ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்குப் பணிக்கொடை வழங்க வேண்டும், 2015 பிப்ரவரிக்குப் பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர் பங்கைத் தர வேண்டும், 2013 அக்டோபருக்குப் பின் ஓய்வு பெற்றவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும், புதிய ஒப்பந்தப்படி பென்சன் மாற்றியமைத்து, அதற்கான நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும். 2010 அக்டோபர் முதல் வழங்கப்பட வேண்டிய விடுப்புச் சம்பளம் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement