வெளியிடப்பட்ட நேரம்: 17:49 (22/08/2017)

கடைசி தொடர்பு:18:30 (22/08/2017)

தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் சிறை வைக்கப்படும் தனியார் விடுதி இதுதான்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க மூன்று அணிகளாகப் பிரிந்தது. இதற்கிடையில் திடீர் திருப்பமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீசெல்வத்தின் அணியும் ஒன்றாக இணைந்தது. இந்த அணிகள் இணைப்பால் அதிர்ச்சியடைந்த டி.டி.வி தினகரன் தரப்பு, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மெஜாரிட்டியை நிரூபிக்கச் சொல்லி எடப்பாடி பழனிசாமி உத்தரவிடுமாறு மனு அளித்திருந்தனர். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் அவர்கள் கடிதம் அளித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஆட்சிக்குச் சிக்கல் என்பதால் டி.டி.வி ஆதரவு எம்எல்ஏ-க்களை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டது எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் அணி.

புதுச்சேரி

இதையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேரையும் கூவத்தூர் பாணியில், புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி-கடற்கரை சாலையில் அரியாங்குப்பத்தையடுத்து, கடற்கரை கிராமமான சின்ன வீராம்பட்டினத்திலுள்ள ‘விண்ட் ஃப்ளவர்’ (Wind flower) என்ற கடற்கரையோர சொகுசு விடுதியில் தங்க வைக்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த விடுதியின் முன்பக்க கேட் மூடப்பட்டு, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்னும் சிறிது நேரத்தில், விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டில் தங்க உள்ளனர். ரிசார்ட்டில், மொத்தம் 20 அறைகள் தற்போது முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க