வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (22/08/2017)

கடைசி தொடர்பு:20:40 (22/08/2017)

வட சென்னைப் பகுதிகளில் கடல் சீற்றம்..! வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது


காசிமேடு, எண்ணூரின் கடல் பகுதியில் ஏற்பட்ட சீற்றம் காரணாக மீனவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.


திருவான்மியூர், பெசன்ட் நகர், பட்டினப்பாக்கம், காசிமேடு, எண்ணூர், ராயபுரம் ஆகிய பகுதிகள் சென்னையின் கடற்கரைப் பகுதிகளாக இருந்துவருகின்றன. வங்கக் கடலில் ஒரு கரையோரமாக இந்தப் பகுதிகள் அமைந்துள்ளன. இந்தக் கடற்கரையோரப் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாகக் கடல் சீற்றம் அதிகமாகவே இருந்தது. காலை முதல் கடல் அலைகள் கொந்தளித்த வண்ணமே இருந்துவந்தது. இதுகுறித்து வட சென்னை கடற்கரையோரப் பகுதியில் வசிக்கும் விஜய் என்பவரிடம் கேட்டபோது, 'ஆடி மாதத்தில் இது போன்ற கடல் சீற்றம் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்' என்று தெரிவித்தார். இருப்பினும் இந்த முறை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் எண்ணூர் கடற்கரையையொட்டிய ஒரு சில வீடுகள் சேதமடைந்துள்ளன. சில வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்து வீடுகளைச் சேதப்படுத்தியது.