Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மின் கம்பத்தில் காவிக்கொடி! - கொதிக்கும் கோவை கம்யூனிஸ்ட்கள்


விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகின்ற வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, இந்து அமைப்புகளின் சார்பில் பேனர் மற்றும் போஸ்டர்களும் வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக விநாயகர் சதுர்த்தி என்றாலே, இந்து இயக்கங்கள் பேனர் மற்றும் போஸ்டர்களை வைத்து அதகளம் செய்வார்கள்.


இந்நிலையில், கோவையில் மின் விளக்குக் கம்பத்தில் இந்து அமைப்பின் கொடி கட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதுவும், கோவை நகரின் முக்கியச் சாலையான, மேட்டுப்பாளையம் சாலையில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் சேரன் நகர் முதல், ஜி.என் மில்ஸ் வரை சாலையின் நடுவில் உள்ள மின் விளக்குக் கம்பத்தில் இந்து அமைப்பின் கொடி கட்டப்பட்டுள்ளன. பொதுவாக மின்கம்பங்களில் கொடி கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது. 


இது குறித்து, சி.பி.ஐ மாவட்ட நிர்வாகக்குழுவைச் சேர்ந்த அசரஃப் அலியிடம் பேசியபோது, "விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுதான் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மின்கம்பங்களில் கொடி கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது. மாநிலத்தில், ஆளும் கட்சிகளே மின்கம்பங்களில் கொடிகட்ட மாட்டார்கள். அதேபோல, இந்து முன்னணியின் சசிக்குமார் கொலைக்குப் பலி தீர்ப்போம் என்ற ரீதியிலும் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைத்துள்ளனர். இது குறித்து புகார் அளித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்" என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement