Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கிகள் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் பாதிப்பு

வங்கிகள் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் பொதுமக்களும், வர்த்தகர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். வங்கிகளில் ஆளில்லை,  ஏடிஎம்களில் பணம் இல்லை. மதுரையில் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டார்கள். நெட்பேங்கிங், மொபைல்ஆப் வைத்திருந்தவர்கள் பணப்பரிமாற்றம் செய்து கொண்டனர். ஸ்வைப் மெஷின் உள்ள கடைகள், ஹோட்டல்களை விசாரித்து கார்டுகளைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

bank


வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்கள் கூறும்போது, ''மக்களுக்குச்  சிரமம்தான், இப்போராட்டம் அவர்கள் நலனுக்காகத்தான். மக்களைப் பாதிக்கும் வகையில் பல சர்வீஸ் சார்ஜுகளை வங்கிகள் விதித்து வருகிறார்கள். பணக்காரர்களுக்கு மட்டும்தான் வங்கி சேவை என்பதுபோல மாற்றி வருகிறார்கள். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வேலைநிறுத்தத்தின் முக்கிய நோக்கம் பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கக் கூடாது, வங்கிகளை இணைக்கக் கூடாது, வாடிக்கையாளர்களிடம் சேவை வரி வசூலிக்கக் கூடாது, பெருமுதலாளிகளிடம் வாராக் கடனாக 15 லட்சம் கோடி உள்ளது, அரசு வாராக் கடனை வசூலிக்க ஆர்வம் காட்டவில்லை, அதேநேரம், விவசாயிகள், மாணவர்களிடம் கடனை வசூலிக்க கடுமை காட்டுகிறது. இதுபோன்ற பல கோரிக்கைகளுக்குத்தான் இப்போராட்டம். இதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லைன்றால், தொடர் போராட்டம் நடத்தவுள்ளோம்.''என்றனர். தனியார் வங்கிகள் வழக்கம்போல செயல்பட்டன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement