Published:Updated:

கச்சான் காற்றால் பாம்பன் அருகே கரை ஒதுங்கிய 150 அடி நீளமுள்ள சரக்குக் கப்பல்!

இரா.மோகன்
உ.பாண்டி

150 அடி நீள இந்தக் கப்பல், தூக்குப்பாலத்தைக் கடந்து செல்வதற்காக தென் கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, தென்மேற்குத் திசையிலிருந்து வடகிழக்குத் திசை நோக்கி வீசிய 'கச்சான்' காற்றினால் அந்தக் கப்பல் கட்டுப்பாட்டை இழந்தது.

பாம்பன் குந்துகால் அருகே கரை ஒதுங்கிய சரக்கு கப்பல்
பாம்பன் குந்துகால் அருகே கரை ஒதுங்கிய சரக்கு கப்பல் ( உ.பாண்டி )

பாம்பன் கடல் பகுதியில் வீசிய கச்சான் காற்றினால், ஆழ்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சரக்குக் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து கரை ஒதுங்கியது. இதனால், அப்பகுதியில் திடீர் பரப்பு ஏற்பட்டது.

குந்துகால் அருகே கரை ஒதுங்கிய சரக்கு கப்பல்
குந்துகால் அருகே கரை ஒதுங்கிய சரக்கு கப்பல்
உ.பாண்டி

நாட்டின் தென்பகுதியிலிருந்து வடபகுதிகளுக்குச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மற்றும் இழுவைக் கப்பல்கள், வங்கக்கடலில் அமைந்துள்ள பாம்பன் தூக்குப் பாலத்தின் வழியாகச் சென்று வருகின்றன. பாம்பன் கடலில் அமைந்துள்ள ஆழமான சானல் வழியாக இக்கப்பல்கள் செல்ல ஏதுவாக, பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதி திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டடைக் கடந்த இந்தப் பாலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பாதிப்பினால், ரயில் போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டு சீரமைக்கப்பட்டது. வழக்கமாக வாரத்தில் ஒரு நாள் கப்பல் மற்றும் படகுகள் கடந்துசெல்ல ஏதுவாக திறக்கப்பட்டுவந்த இந்த தூக்குப் பாலம், சமீப காலமாக குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் பாலத்தை கடந்து செல்வதற்காக வரும் கப்பல்கள், நாள் கணக்கில் பாம்பன் கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று காலை கேரள கடல் பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக காக்கிநாடா துறைமுகத்திற்கு செல்வதற்காக கிரைனுடன்கூடிய சரக்குக் கப்பல் ஒன்று, பாம்பன் தென்கடல் பகுதிக்கு வந்தது.

சுமார் 2 மணி நேர மீட்புப் பணியைத் தொடர்ந்து, கரை ஒதுங்கிய கப்பல் ஆழமான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது!

சுமார் 150 அடி நீளமுள்ள இந்தக் கப்பல், தூக்குப்பாலத்தைக் கடந்து செல்வதற்காக தென் கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, தென்மேற்குத் திசையிலிருந்து வடகிழக்குத் திசை நோக்கி வீசிய 'கச்சான்' காற்றினால், அந்தக் கப்பல் கட்டுப்பாட்டை இழந்தது. காற்றின் வேகத்தினால் இழுத்து வரப்பட்ட அந்தக் கப்பல், குந்துகால் - முகமதியர்புரம் இடையே அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியது. இதனால் கப்பலை மீண்டும் ஆழமான பகுதிக்குக் கொண்டுசெல்ல இரு விசைப்படகுகள் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 2 மணி நேர மீட்புப் பணியைத் தொடர்ந்து, கரை ஒதுங்கிய கப்பல் ஆழமான பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து, கப்பலில் இருந்த மாலுமிகள் உள்ளிட்ட பணியாளர்கள் நிம்மதி அடைந்தனர்.