Published:Updated:

`பிளாக் பண்ணுங்க; ஃப்ரீயா இருங்க!' - `பொதுநலன் கருதி' ஒரு கதை

Spam Calls (Representational Image)
News
Spam Calls (Representational Image)

இவனுங்களுக்கெல்லாம் எப்படி நம்பளோட நம்பர் போகுது? ரொம்ப ரொம்ப மூளையைக் கசக்கிக் கண்டுபிடிக்க வேண்டிய கேள்வியெல்லாம் கிடையாது. நாமதான் போற இடத்துலயெல்லாம் அந்த போட்டி, இந்த போட்டினு கண்டதுக்கும் நம்பர்களை ஷேர் பண்றோம். அப்புறம் நாம ஏறுற கடையிலயெல்லாம் நம்பரை வாங்காம விடறதே இல்லை.

`ஹலோ, மேடம் நாங்க மியாவ் மியாவ் ஃபைனான்ஸ்ல இருந்து பேசுறோம். பர்சனல் லோன் வேணுமா?'

`நாங்க, அக் குவா குவா வாட்டர் ப்யூரிஃபையர்ல இருந்து பேசுறோம்'

`உங்க பேங்க் அக்கவுண்ட் தொடர்பா பேசணும். சொய்ங் சொய்ங் பேங்க்ல இருந்து கூப்பிடறோம். எஃப்டியில போட்டீங்கனா...'

தினம் தினம் இப்படியெல்லாம் உங்களுக்கு போன் வரலைன்னா... சந்தோஷம். ஆனா, உங்க சந்தோஷத்தைத் தொலைக்கற வகையில இப்படிப்பட்ட போன்கால்கள் உங்களுக்கு வந்துகிட்டே இருந்தா, நீங்க நானு எல்லாம் ஒரே இனம்.

Spam Calls (Representational Image)
Spam Calls (Representational Image)
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்படிப்பட்ட போன்கள் வர்றது தப்பில்ல. அதாவது, நாம எதிர்பார்க்கும்போதோ... தேவைப்படும்போதே உரியவங்ககிட்ட இருந்து இப்படிப்பட்ட போன் கால்கள் வர்றதுல தப்பில்ல. ஆனா, நடு ராத்திரியில தூங்கிகிட்டிருக்கும்போதும் படுத்தி எடுக்கிறானுங்களே... நாம எதிர்பார்க்காமலே!
அதுலயும் இந்தக் கொரோனா கொடுமை ஆரம்பிச்ச பிறகு, இவனுங்க தொல்லை கூடுதலாயிடுச்சு. அவனவன் வொர்க் ஃப்ரம் ஹோம்னு வீட்டுல உக்கார்ந்துகிட்டே, கிடைச்ச நம்பருக்கெல்லாம் போனை போட்டு உயிரை எடுக்கறானுங்க.
ஒரேவழி... தெரியாத புரியாத நம்பர்ல இருந்து போன் வந்தா எடுக்காமலே விட்டுடறது. ஒருவேளை, ஏதாவது போனை எதிர்பார்த்துக் காத்திருந்தா எடுக்கலாம். ஆனா, அந்த சைடுல இருந்து `ஹலோ'னு சொன்னதுமே விஷயம் புரிஞ்சுடும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உடனடியா தப்பிக்கப் பார்க்கறதுதான் புத்திசாலித்தனம். மறந்தும் பதில் சொல்லிட்டா, நாம செத்தோம். `ஒரேயொரு நிமிஷம் நான் சொல்றத கேட்டுட்டு, போனைக் கட் பண்ணிடுங்க. உங்க வாழ்க்கை ஓகோனு மாறுறதுக்கு நான் கேரண்டி'னு ஆரம்பிப்பாங்க. அந்த ஒரேயொரு நிமிஷம்தான், நமக்கு உலை வைக்கிற நிமிஷம்.
ஆமாம்... கருணையே இல்லாம எடுத்ததுமே கட் பண்றதுதான் ஒரே தீர்வு. ஒருவேளை உங்களுக்கு இரக்கம் ஜாஸ்தியா இருந்தா, `ஸாரி'ங்கற ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிட்டு, எதிர்த்தரப்புல பதிலே எதிர்பாக்காம சட்டுபுட்டுனு கட் பண்ணிடுங்க.
இதுல ஒரு தில்லாலங்கடி வேலையையும் கூடுதலா சில பேரு செய்யுறாங்க. அதாவது, எதிர்முனையில இருக்கற நம்பர் பெண்ணோடதா... ஆணோடதா எனத் தெரிஞ்சுகிட்டு, பெண்ணா இருந்தா ஆணும், ஆணா இருந்தா பெண்ணும் பேசுறதுகூட நடக்குது.

Spam Calls (Representational Image)
Spam Calls (Representational Image)
Pixabay

சரி, இவனுங்களுக்கெல்லாம் எப்படி நம்பளோட நம்பர் போகுது?
ரொம்ப ரொம்ப மூளையைக் கசக்கிக் கண்டுபிடிக்க வேண்டிய கேள்வியெல்லாம் கிடையாது. நாமதான் போற இடத்துலயெல்லாம் அந்த போட்டி, இந்த போட்டினு கண்டதுக்கும் நம்பர்களை ஷேர் பண்றோம். அப்புறம் நாம ஏறுற கடையிலயெல்லாம் மொபைல் நம்பரை வாங்காம விடறதே இல்லை. பாயின்ட்ஸ் கிடைக்கும்... ரீடிம் பண்ணிக்கலாம். கூப்பன் கிடைக்கும், டிஸ்கவுன்ட் ஆஃப்ர் கிடைக்கும்னு நம்ம நம்பற வாங்கம விடறதே இல்ல. அப்புறம், இந்த ஆதார் தொடங்கி அத்தனையும் சுலபமா நோண்டி நொங்கெடுத்து நம்பர்களைக் கண்டுபிடிச்சுடறானுங்க வொயிட் டெவில்ஸ். அப்புறம், நம்ப நம்பர்ல்லாம்தான் டேட்டா. ஜெராக்ஸ் கடை, ரீசார்ஜ் கடைனு ஆரம்பிச்சு எப்படி எப்படியெல்லாம் இந்த டேட்டாக்களை காசுக்காக விக்கிறாங்கனு விஷாலோட `இரும்புதிரை' படத்துல விலாவாரியா சொல்லியிருப்பாங்களே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆக, இதையெல்லாம் தடுத்து நிறுத்தற சக்தி நம்மகிட்ட கிடையாது. அதாவது, இந்த நம்பர் திருடர்கள்கிட்ட இருந்து நம்ம போன் நம்பர்களைக் காப்பாத்தவே முடியாது. ஆமா, அரசாங்கத்தாலேயே முடியல... ஆலமரத்தடி கிராமத்துல இருக்கிற நம்பளால எப்படி முடியும். ஆனா, ஒண்ணே ஒண்ணு முடியும்... அதுதான் காலர் பிளாக்!
அதுதான் மிகமிக முக்கியமான வேலை. அது நம்மளால மட்டுமே செய்யக்கூடிய வேலை. அதாவது, இப்படி படுத்தி எடுக்கிற நம்பர்களை கையோட பிளாக் பண்ணணும்கிறதுதான் முக்கியம்.
ஸ்மார்ட்டா இருக்கறவங்களை பத்தி கவலை இல்ல. ஆனா, பேசிக் மாடல் போன்... ஸ்மார்ட் போன்னு வாங்கி வெச்சிக்கிட்டு, வெறுமனே பேசுறதுக்கு மட்டுமே பயன்படுத்தத் தெரிஞ்சவங்களுக்காக சில கூடுதல் குறிப்புகள்.

Spam Calls (Representational Image)
Spam Calls (Representational Image)
Pixabay

தேவையில்லாத நபர்கள்/தெரியாத நபர்கள்கிட்ட இருந்து போன் வந்ததும், முதல்ல ஸாரி சொல்லி கட் பண்ணிடுங்க. கையோட போன் ஸ்கிரீன்ல அந்த நம்பருக்குக் கீழே கொஞ்சம் தள்ளிப் பார்த்தீங்கனா, பிளாக் திஸ் காலர்னு (BLOCK THIS CALLER) இங்கிலீஷுல இருக்கும். அதைக் க்ளிக் பண்ணிடுங்க... வேலை முடிஞ்சுது. பேசுறதுக்கு மட்டுமே பயன்படுத்துற சின்ன போன்லயும் இந்த வசதி இருக்கு.

இப்படி பண்ணிட்டா, இனிமே தொல்லையே இருக்காதுனு நினைச்சுடாதீங்க. அடுத்த நிமிஷமே கூட ஒருத்தன் ஏழரையைக்கூட்டுவான். இருக்கவே இருக்கு... பிளாக். ஆமாம், பிளாக் பண்ணிட்டே இருங்க. ஒரு கட்டத்துல ஒரு நாளைக்கு ஒரு போன்ங்கற அளவுக்கு குறைஞ்சுடும்.

- பூநீ