Published:Updated:

சுனாமியால் வீடுகளை இழந்த 72 குடும்பத்தினர்! - 66 சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய திமுக பிரமுகர்

தி.மு.க.பிரமுகர் தாமஸ் ஆல்வா எடிசன்
தி.மு.க.பிரமுகர் தாமஸ் ஆல்வா எடிசன்

``சுனாமியால் வீடு வாசலை இழந்த நேரத்தில், தற்காலிகமாக எனது இடத்துல் தகர ஷீட் வீடு கட்டிக் கொடுத்தோம். அவங்க பேர்ல பட்டா இருந்தா அரசாங்கத்தின் மூலமா வீடு கட்டித் தரலாம்”

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சுனாமியால் வீடுகளை இழந்த 72  குடும்பத்திற்கு பட்டா வழங்க, 66 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியிருக்கிறார்  வேளாங்கண்ணி முன்னாள் பேரூராட்சித் தலைவரும், தி.மு.க. கீழையூர் ஒன்றிய செயலாளருமான தாமஸ் ஆல்வா எடிசன்.

தி.மு.க.பிரமுகர் தாமஸ் ஆல்வா எடிசன்
தி.மு.க.பிரமுகர் தாமஸ் ஆல்வா எடிசன்

நாகை மாவட்டம்  வேளாங்கண்ணியில், கடந்த 2004 - ம் ஆண்டு சுனாமியால் 72 ஏழைக் குடும்பத்தினர் வீடுகளை இழந்து தவித்தனர். அப்போது வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவராக இருந்த தாமஸ் ஆல்வா எடிசன் தனது முயற்சியில், தொண்டு நிறுவனம் மூலமாக 72 குடும்பங்களுக்கும் வீடுகள் அமைத்து தந்துள்ளார். அவ்வீடுகளில்  வசிப்போருக்கு  மின்சார வசதி, சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

தற்பொழுது  அங்கு வசிக்கும் குடும்பத்தினர், "உங்கள் தொகுதியில்  ஸ்டாலின்" சுற்றுப்பயணத்தில் பட்டா வேண்டி மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவானது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, அது தொடர்பான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில்  அவர்கள் வசிக்கும் வீடுகளுள்ள  66 சென்ட் நிலத்தினை, அதாவது சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான அந்த இடத்தினை தானமாக, அப்பகுதி மக்களுக்கு வழங்குவதாகவும், மேலும் அப்பகுதி மக்களுக்கு  பட்டா வழங்கி , அரசு சார்பில் வீடு கட்டிக்கொள்ளவும் வழிவகை செய்து தரக்கோரியும் நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கௌதமன் முன்னிலையில், இடத்திற்கான ஆவண‌ பத்திரத்தை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் அளித்துள்ளார் தாமஸ் ஆல்வா எடிசன்.

தாமஸ் ஆல்வா எடிசன்
தாமஸ் ஆல்வா எடிசன்

இதுபற்றி தாமஸ் ஆல்வா எடிசனிடம் பேசினோம். "சுனாமியால் வீடு வாசலை இழந்த நேரத்தில், தற்காலிகமாக எனது இடத்துல் தகர ஷீட் வீடு கட்டிக் கொடுத்தோம். அவங்க பேர்ல பட்டா இருந்தா அரசாங்கத்தின் மூலமா வீடு கட்டித் தரலாம். அதனாலதான் அந்த இடத்தை அரசிடம்  ஒப்படைச்சேன். அவங்க எல்லாருக்கும் பட்டா போட்டு கொடுத்து வீடு கட்டித் தந்துடுவாங்க. ஏதோ என்னால் முடிஞ்ச உதவி.

2 பெண் குழந்தைகளுடன் கலங்கி நின்ற பெண்; உடனடி உதவி கிடைக்கச் செய்த கலெக்டர்!

வேளாங்கண்ணி செட்டித்தெரு சுனாமி குடியிருப்பில் வசிக்கும் 176 குடும்பங்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்காமல் இருந்தது .அவர்களும் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின" பயணத்தில்  மனு கொடுத்திருக்காங்க. அவர்களுக்கும்  மாவட்ட ஆட்சியர் மூலமா  பட்டா வழங்க ஏற்பாடு செய்திருக்கிறேன். அதுபோல முஸ்ஸீம் தெருவில் வசிக்கும் சிறுபான்மை மக்கள் 14 குடும்பங்களுக்கும் பட்டா வழங்க ஏற்பாடு செய்திருக்கிறேன்" என்றார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு