Published:Updated:

நாகையில் வீட்டில் கஞ்சா பதுக்கிய கும்பல்! - அதிரடி காட்டிய போலீஸார்

அங்கு 20 பண்டல்களில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

நாகையில் வீட்டில் கஞ்சா பதுக்கிய கும்பல்
நாகையில் வீட்டில் கஞ்சா பதுக்கிய கும்பல்

நாகையில் பேச்சியம்மாள் என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகையில் வீட்டில் கஞ்சா பதுக்கிய கும்பல்! - அதிரடி காட்டிய போலீஸார்

நாகப்பட்டினம் பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிரடியாக பப்ளிக் ஆபீஸ் ரோட்டிலுள்ள பேச்சியம்மாள் என்பவர் வீட்டினுள் நுழைந்து போலீஸார் சோதனையிட்டனர். அப்போது அங்கு  20 பண்டல்களில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். சோதனையிட போலீஸார் வரும் தகவலை முன்கூட்டியே  அறிந்த கஞ்சா வியாபாரிகளான ராணி, ஆனந்த், மீனாட்சி ஆகியோர் அதற்கு முன்பாக அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அவர்கள் மூவரையும்  போலீஸார் தேடி வருகின்றனர்.

காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் நாகை பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் வசிக்கும் பேச்சியம்மாளின் வீட்டை கஞ்சா வியாபாரியான ராணி என்பவர் அடமானத்துக்கு வாங்கியுள்ளார். ஆந்திராவிலிருந்து மதுரை வழியாக கஞ்சாவைக் கடத்தி வந்து  அதை  இங்கு பதுக்கி வந்துள்ளார். நாகையில்  மகன் ஆனந்த் மற்றும் மருமகள் மீனாட்சி ஆகியோருடன் சேர்ந்து சில்லறையாக விற்பனை செய்துவந்தது தெரியவந்துள்ளது இங்கிருந்துதான் வேளாங்கண்ணி, காரைக்கால் போன்ற பகுதிகளுக்கு கஞ்சா ஏற்றுமதி செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை தொடர்கிறது.