Published:Updated:

நண்பர்களோடு பார்ட்டி... கல்லூரியின் நடவடிக்கை... மாணவியின் தற்கொலை முயற்சி!

தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி
தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி

`தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவ மாணவிகள் திருந்துவதற்கான நெறிமுறைகளைச் செய்திருக்க வேண்டுமே தவிர, அவர்களது எதிர்காலத்தையே பாதிக்கின்ற வகையில் நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது’

தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி மாணவிகள் மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே கல்லூரி நிர்வாகம், மது அருந்திய நால்வரை நிரந்தர நீக்கம் செய்து உத்தரவிட, இதனால் மனமுடைந்த மாணவிகளில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்செயல்கள் மக்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது.

தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி
தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பழம்பெருமை வாய்ந்த தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இங்கு பயிலும் மூன்று மாணவிகள் மற்றும் ஒரு மாணவர், கல்லூரி சீருடையில் மது அருந்தும் காட்சி வலைதளங்களில் வைரலானது. உடனடியாகக் கல்லூரி துறைத்தலைவர்கள் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் ஆலோசித்து, கல்லூரி விதிகளுக்கு மாறாகவும், நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொண்ட 4 பேரை கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவு நகலும் வலைதளங்களில் வெளியானதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் மனமுடைந்த மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் 'தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவ மாணவிகள் திருந்துவதற்கான நெறிமுறைகளைச் செய்திருக்க வேண்டுமே தவிர, அவர்களது எதிர்காலத்தையே பாதிக்கின்ற வகையில் நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது' என்றும், "அதிர்ச்சியும் அருவருப்பும் தந்த வீடியோ ஆதாரம் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்ற மாணவிகளைக் கல்லூரிக்கு அனுப்பவே பெற்றோர் தயங்குவார்கள்'' என்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

வரதராஜன்
வரதராஜன்

இதுபற்றி சமூக ஆர்வலரும் ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியருமான ஜெயராமனிடம் பேசினோம்.

"இன்றைய இளைஞர்களில் 47% பேர் மது அருந்துகிறார்கள் என்று ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஒருவர் அல்லது இருவர் முக்காடு போட்டு, தன் முகத்தை மறைத்துக்கொண்டு குடித்த நிலை மாறி, இன்று பள்ளிப் பிள்ளைகள்கூட கஞ்சா மற்றும் போதை தரும் புகையிலைப் பொருள்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தும் நிலையைக் காண்கிறோம். திரைப்படங்களை வாழ்வியல் வழிமுறையாகப் பலர் பின்பற்றுகிறார்கள். பெரும்பாலான திரைப்படங்களில் கல்லூரி மாணவ மாணவியர் மது அருந்தும் காட்சிகளை அமைத்து அது அவர்களின் அடையாளமாகக் காட்டப்படுகிறது. திருவள்ளுவருக்கு பிரம்மாண்ட சிலை அமைத்துவிட்டு அவர் போதித்த கள்ளுண்ணாமை என்ற கருத்தை அடித்து நொறுக்குகிறார்கள்.

மாணவ மாணவியர் மது அருந்தினார்கள் என்ற ஒரு காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை என்ற பெயரில் நிரந்தர நீக்கம் செய்து அதையும் வெளியிட்டு சமூகத்தில் இழிவைத் தேடித் தந்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கை இதன் காரணமாகத் தங்களைப் பரிசுத்தமாக அறிவித்துக்கொள்ளும் முயற்சியில் கல்லூரி நிர்வாகம் இறங்கியிருக்கிறது. இது முறையான செயலாகாது. ஏற்புடையதல்ல. இந்த விஷயத்தில் ஊரெங்கும் மதுக்கடைகளைத் திறந்து விற்பனை செய்யும் தமிழக அரசுதான் முதல் குற்றவாளி. நன்னெறிகளைப் போதித்து நல்வழிக் காட்டத் தவறிய கல்வி நிறுவனங்கள் இரண்டாவது குற்றவாளி. பின் விளைவு அறியாமல் படுகுழியில் விழுகின்ற மாணவ மாணவியர் மூன்றாம் குற்றவாளியாகத்தான் இருக்க முடியும். மாணவ மாணவியர் செய்த தவற்றை உணர்ந்து திருந்தும் வகையில் அறிவுரை செய்து வழிபடுத்துவது நல்ல சிந்தனையாகும். மாறாகப் பிள்ளைகளைக் குற்றவாளிகளாக்குவது சமூக அக்கறை உள்ளவர்களின் செயல்முறையாக இருக்க முடியாது" என்றார் வருத்தமாக.

 ஜெயராமன்
ஜெயராமன்

ஓய்வுபெற்ற தனியார் கல்லூரி முதல்வர் வரதராஜனிடம் பேசியபோது,

"இன்றைய சூழல் மாணவ மாணவியர் எளிதாகச் சில தவறுகளைச் செய்ய சாதகமாகியுள்ளது. தவறான நோக்கில் செல்போன் இணையதள பயன்பாடு, புகையிலை சார்ந்த போதைப் பொருள்கள் உபயோகிப்பது, மதுப் பழக்கம் மற்றும் சமூக விரோதிகளின் சகவாசம் போன்றவை எளிதாக மாணாக்கர்களைத் தீய வழிக்கு அழைத்துச் செல்லும். இத்தகைய தவறுகளில் ஈடுபடும் மாணாக்கர்கள் எதிர்காலம் சீரழிக்கப்படுவது தெரியாமலேயே செய்து தங்கள் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்குகின்றனர். இதைத் தடுக்க பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் 'வருமுன் காக்கும்' நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். மாணவர்கள்

நடவடிக்கைகளை பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூர்ந்து கவனித்து, ஏதேனும் ஒரு மாணவ மாணவியரிடம் இதுநாள் வரை இல்லாத மாற்றம் தென்பட்டாலோ, கேள்வியுற்றாலோ அதை உதாசினப்படுத்தாமல் தவறுகள் இருக்குமேயானால் உறுதி செய்து, தனிநபர் ஆலோசனை மூலம் தகுந்த பயிற்சியாளர் கொண்டு தொடக்கத்திலேயே சரிசெய்தல் வேண்டும்.

``தருமபுரம் தனியார் கல்லூரி மாணவிகள் 4 பேர் மது அருந்திய காணொலி வெளியானதும், அதற்காக அவர்கள் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டின் வருங்காலத் தூண்களை மது எவ்வாறு சீரழிக்கிறது என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் தேவையில்லை. திரும்பிய திசையெல்லாம் மது தாராளமாகக் கிடைப்பதுதான் மாணவிகள் மது அருந்துவதற்குக் காரணம் ஆகும். சிறுவர்கள் கூட சீரழிவதற்குத் தெருவெங்கும் மதுக்கடைகள் இருப்பதுதான் காரணம். நாட்டையும் வீட்டையும் உடல்நலத்தையும் காக்கத் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் ஒரே தீர்வு – ராமதாஸ், நிறுவனர், பா.ம.க
`மோடி, அமித் ஷா மீது கடுமையான விமர்சனம்!’ -நெல்லை கண்ணன் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு

உதாரணமாக, நான் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய காலத்தில் ஒரு வகுப்பறையின் மூலையில் புகையிலை எச்சிலை பார்த்து திடுக்கிட்டேன். யாரோ சில மாணவர்கள் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதைக் கண்டறிய முயற்சித்தோம். அந்த நேரத்தில் கண்டறிய முடியவில்லை. சில தினங்கள் கழித்து பல் மருத்துவ முகாம் நடத்தி, அதன் மூலம் ஒரு மாணவரைக் கண்டறிந்து கவுன்சிலிங் கொடுத்துத் திருத்தினோம். அதுபோல கல்லூரியில் படிக்கும் மாணாக்கர்கள் வளர்ந்தவர்கள் எனப் பெற்றோர் ஒதுங்கி இருக்காமல் அவர்களோடு தினம் அன்பாக அக்கறையுடன் பேசுதல் வேண்டும்.

கல்லூரி
கல்லூரி

கல்வி நிறுவனங்கள் அடிக்கடி மேற்சொன்ன தீய பழக்கங்களின் சட்டரீதியான விளைவுகள், மருத்துவரீதியான விளைவுகள், சமுதாய விளைவுகள் போன்றவற்றை துறைசார்ந்த அறிஞர்களை வரவழைத்து மாணாக்கர்களுக்கு வழிகாட்டுதல் வேண்டும். `தன்னை அறிய தனக்கொரு கேடில்லை' என்பதற்கிணங்க மாணாக்கர்கள் கல்வி பயிலும் காலத்து, அவர்களுடைய கடமை நன்றாகக் கற்பது மட்டுமே என்பதைப் புரியவைத்தல் வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு