Published:Updated:

தூத்துக்குடி: நீச்சல் தெரியாமல் குளத்தில் குளியல்- சிறுமியைக் காப்பாற்ற முயன்ற பெண்ணும் பலியான சோகம்

சிறுமியைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

தூத்துக்குடியில் துக்க நிகழ்வை முடித்துவிட்டு குடும்பத்தினர் குளத்தில் குளிக்கச் சென்றனர். அப்போது நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கிய சிறுமியைக் காப்பாற்ற முயன்ற இளம்பெண்ணும் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், சிவகளை, நயினார்புரத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரின் மனைவி சண்முகத்தாய். இவர்களுக்கு சுடலைக்கனி, வள்ளி, திவ்யதர்ஷினி என மூன்று மகள்கள் உள்ளனர். அக்டோபர் 30-ம் தேதி, சண்முகத்தாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கடந்த 5-ம் தேதி தேவராஜின் வீட்டில் சண்முகத்தாயின் நினைவுச்சடங்கு நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. இதில், கலந்துகொள்வதற்காக உறவினர்கள் வந்திருந்தனர்.  

சிறுமியை  மீட்ட தீயணைப்பு வீரர்கள்
சிறுமியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

இந்த நிலையில், நேற்று (6-ம்தேதி) மாலையில் தேவராஜின் மகள்கள், உறவினர்கள் சிவகளையில் உள்ள பெரியகுளத்துக்குக் குளிக்கச் சென்றனர். இதில் எதிர்பாராதவிதமாக கோகிலா என்ற 12 வயது சிறுமி நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கினார். அந்தச் சிறுமியைக் காப்பாற்றுவதற்காக தேவராஜின் மூத்த மகளான சுடலைக்கனி தண்ணீருக்குள் இறங்கினார்.

அப்போது இருவருமே சகதியில் சிக்கினர். அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு குளத்தின் அருகில் இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றனர். மீட்கப்பட்ட சுடலைக்கனியை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்தார். ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சிறுமி கோகிலாவைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கதறி அழுத உறவினர்கள்
கதறி அழுத உறவினர்கள்

சுமார் 30 நிமிட தேடலில், சகதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கிய சிறுமி கோகிலாவைச் சடலமாகத்தான் மீட்க முடிந்தது.  தாய் இறந்த 8-வது நாளில் மகளும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல, அத்தையின் துக்க நிகழ்வுக்காக வந்த சிறுமி கோகிலா, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.