Published:Updated:

``மாபெரும் தொழில்முனைவுக்கான... ட்ரில்லியன் டாலர் கனவு!" - விளக்கும் சுரேஷ் சம்பந்தம்

சுரேஷ் சம்பந்தம் - கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்

`கனவு’ தொடர் மூலம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு நம் மாவட்டங்களிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி வாய்ப்புகளே நாமே உருவாக்கிக்கொள்வது குறித்து `கனவு’ - தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் விரிவாகச் சொல்லிவருகிறார். இதுகுறித்து அவருடன் ஓர் உரையாடல்...

``மாபெரும் தொழில்முனைவுக்கான... ட்ரில்லியன் டாலர் கனவு!" - விளக்கும் சுரேஷ் சம்பந்தம்

`கனவு’ தொடர் மூலம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு நம் மாவட்டங்களிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி வாய்ப்புகளே நாமே உருவாக்கிக்கொள்வது குறித்து `கனவு’ - தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் விரிவாகச் சொல்லிவருகிறார். இதுகுறித்து அவருடன் ஓர் உரையாடல்...

Published:Updated:
சுரேஷ் சம்பந்தம் - கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்

`` `கனவு’ என்ற தொடரை எழுதுவதன் நோக்கம், அந்த எண்ணம் உருவான பின்னணி என்ன?”

``தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என 2018-ல் ஒரு திட்ட முன்வரைவை வெளியிட்டோம். மிகக் குறுகிய காலத்தில் இது தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ இலக்காக மாறிவிட்டது. அந்த இலக்கை உருவாக்கும்போது இந்தப் பொருளாதார வளர்ச்சி, பணம் படைத்தவர்களுக்கானதாக இல்லாமல், அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பமாக இருந்தது. அதோடு, இந்த வளர்ச்சி தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் எனவும் விருப்பப்பட்டோம். அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருக்கும் வாய்ப்புகளையும் வளங்களையும் எடுத்துக்காட்ட வேண்டும் எனத் திட்டமிட்டோம். அரசா, இளைஞர்களா, தொழில்முனைவோரா யார் இதைப் பயன்படுத்தப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல வேண்டும் எனச் சொன்னால் மட்டும் போதாது, அதற்குத் தூண்டுதலாக என்னால் முடிந்த ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற உந்துதலின் விளைவே 'கனவு' தொடர்.”

சுரேஷ் சம்பந்தம் - 
கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்
சுரேஷ் சம்பந்தம் - கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில், என்னென்ன வளங்கள் இருக்கின்றன, அதை எப்படிச் சந்தைப்படுத்தலாம் என்பவற்றைக் கண்டறிய நீங்கள் செய்யும் முயற்சிகள் என்னென்ன?”

``மாவட்டம்வாரியாக 'கனவு' தொடரை எடுத்துச் செல்ல வேண்டும் என முடிவான பிறகு யூகத்தின் அடிப்படையில் எதையும் சொல்லக் கூடாது என உறுதியாக இருந்தோம். சொல்லப்படும் தீர்வுகள் அனைத்தும் ஆராய்ச்சிகள் அடிப்படையில், உண்மையை ஒட்டி மக்களின் குரலாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொண்டோம். மாவட்டத்தில் எத்தனை வட்டங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டு, வட்டாட்சியர்களைத் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், எங்களால் 50 சதவிகித வட்டாட்சியர்களையே இணைக்க முடிந்தது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை குறைந்தது 80 சதவிகிதமாக உயரும் என நினைக்கிறேன்.

சுரேஷ் சம்பந்தம் - 
கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்
சுரேஷ் சம்பந்தம் - கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்

அதன் பிறகு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வணிகர்கள், விவசாயிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், தொழிலதிபர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடன் கலந்து பேசி ஒவ்வொரு மாவட்டத்திலுமிருக்கும் வளங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறோம். இவைபோக, அரசின் இணையதளத்தில் ஏராளமான தரவுகள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வளங்கள் குறித்து ஒரு தெளிவுக்கு வருகிறோம். அதன் பிறகு இதற்காக உருவாக்கியுள்ள என்னுடைய குழுவினருடன் கலந்தாலோசித்து அந்த வளங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்குகிறோம். இப்படி சமூக அமைப்பின் அனைத்து அங்கத்தினரும் நாங்களும் நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருந்தே இந்தக் 'கனவு' தொடரை நனவாக்க உழைக்கிறோம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``கனவு தொடரின் இலக்கு என்ன?”

``தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயரும்போது, மாவட்டங்களின் பொருளாதாரமும் அதோடு இணைந்து வளர்ச்சியடைய வேண்டும் என்பதுதான் இந்த 'கனவு' தொடரின் இலக்கு. தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் இப்போது 2.5 லட்சம் ரூபாயாக இருக்கிறது. அதை 7.5 லட்சமாக, அதாவது இப்போது இருப்பதைவிட மூன்று மடங்கு கூடுதல் வருமானம் கொண்டதாக உயர்த்துவதுதான் எங்களின் முக்கியமான இலக்கு.

சுரேஷ் சம்பந்தம் - 
கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்
சுரேஷ் சம்பந்தம் - கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்

``கனவு தொடர் யாருக்கானது?”

``இளைஞர்களுக்கானது. இவர்களோடு தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமானது 'கனவு' தொடர்.

சுரேஷ் சம்பந்தம் - 
கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்
சுரேஷ் சம்பந்தம் - கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்

‘தோளில் ஆட்டைப் போட்டுக்கொண்டு, ஆட்டைக்காணோம் என்று தேடுவதுபோல’ நம்மைச் சுற்றியே பல நூறு கோடி அளவு பொருளாதாரத்தை அடையும் வாய்ப்பும் வளமும் இருப்பது தெரியாமல், தமிழ்நாட்டில் பல ஆயிரம் இளைஞர்கள் இருக்கிறார்கள். அப்படி உழைக்கத் தயாராக இருக்கும், ஆனால் எதில், எப்படி தங்கள் உழைப்புச் செலுத்துவது என்று தெரியாமல் இருக்கும் இளைஞர்களுக்கு நம்மைச் சுற்றியிருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் இந்தத் தொடரின் வழியாக கொண்டு சேர்க்க முயல்கிறோம். இதன் மூலம் மிகப்பெரிய தொழில்முனைவோர் தமிழ்நாட்டில் உருவெடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism