Published:Updated:

மகனுக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் விரக்தி; உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த தந்தை!

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளிப்பு

மகனுக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதால் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்ட உதவி மையம் உள்ளது. இன்று மதியம் இங்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். அதைக் கண்டு அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார், உடனடியாக தீயை அணைத்து அந்த நபரை மீட்டனர்.

தீக்குளிப்பு
தீக்குளிப்பு

பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டவர், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில், தீக்குளித்தவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்தது. தன் மகனுக்கு சாதிச் சான்றிதழ் தரவில்லை என்பதைத் தொடர்ந்து, அவர் தீக்குளித்தது தெரியவந்துள்ளது.

தீக்குளிப்பு
தீக்குளிப்பு

வேல்முருகன் உடலில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான தீக்காயம் ஏற்பட்டிருப்பதினால் அவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீ குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.