Published:Updated:

புதிய கலங்கரை விளக்கம் திறப்பு; உயரத்திலிருந்து தனுஷ்கோடியின் அழகை ரசித்த பள்ளிச் சிறுவர்கள்!

புதிய கலங்கரை விளக்கம்

தனுஷ்கோடியில் ஆரவாரமின்றி திறக்கப்பட்ட புதிய கலங்கரை விளக்கம். முதல் நாள் இலவசமாக அனுமதிக்கப்பட்டதால் தனுஷ்கோடி அழகை உயரத்திலிருந்து குதூகலத்துடன் ரசித்து பார்த்த பள்ளிச் சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் மத்திய அரசு சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் மஞ்சு மாண்டவியரால் ரூ.7.09 கோடி மதிப்பீட்டில் தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்திற்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்தப் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழுவீச்சில் நடந்து வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு கலங்கரை விளக்கம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் புதிய கலங்கரை விளக்கம் எப்போது திறக்கப்படும் என சுற்றுலாப் பயணிகளும், அப்பகுதி பொதுமக்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் எந்த ஓர் ஆரவாரமும் இன்றி நேற்று அது திறக்கப்பட்டது. மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் காணொலிக் காட்சி மூலம் இது திறந்து வைக்கப்பட்டது.

கலங்கரை விளக்கத்தை ரசித்த பள்ளிச் சிறுவர்கள், சுற்றுலாப் பயணிகள்
கலங்கரை விளக்கத்தை ரசித்த பள்ளிச் சிறுவர்கள், சுற்றுலாப் பயணிகள்

இதையடுத்து தனுஷ்கோடி பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், பள்ளிச் சிறுவர், சிறுமிகள் ஏராளமானோர் கலங்கரை விளக்கத்தின் 229 படிகளில் துள்ளிக் குதித்தபடி ஏறிச்சென்று தனுஷ்கோடி கடலின் அழகை உயரத்தில் இருந்து ரசித்து குதூகலித்தனர்.

இந்தக் கலங்கரை விளக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள லிஃப்ட் அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. நேற்று மட்டும் முதல் நாள் என்பதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் கட்டணமின்றி கலங்கரை விளக்கத்தை இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இன்று முதல் ஒரு நபருக்கு பத்து ரூபாய் வீதம் நுழைவுக் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism