Published:Updated:

ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட்டாக பொறுப்பேற்ற தமிழகத்தைச் சேர்ந்த லெஃப்டினன்ட் ஜெனரல்! -யார் இவர்?

லெஃப்டினென்ட் ஜெனரல் மோகன்

சிறப்பு வாய்ந்த வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியின் கமாண்டன்ட் பதவி மிக உயரிய பதவியாக பார்க்கப்படுகிறது.

ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட்டாக பொறுப்பேற்ற தமிழகத்தைச் சேர்ந்த லெஃப்டினன்ட் ஜெனரல்! -யார் இவர்?

சிறப்பு வாய்ந்த வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியின் கமாண்டன்ட் பதவி மிக உயரிய பதவியாக பார்க்கப்படுகிறது.

Published:Updated:
லெஃப்டினென்ட் ஜெனரல் மோகன்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் மெட்ராஸ் ரெஜிமெண்டு சென்டர் எனப்படும் ராணுவ வீரர்களுக்கான பயிற்சி மையமும் இதன் அருகிலேயே டிஃபன்ஸ் சர்வீஸ் ஸ்டாஃப் காலேஜ் எனப்படும் முப்படை உயர் அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுச் செல்லும் ராணுவ வீரர்கள் நமது பாதுகாப்பு படையில் அரணாக விளங்கி வருகின்றனர்.

ராணுவ பயிற்சி கல்லூரி
ராணுவ பயிற்சி கல்லூரி
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த 74 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ராணுவ பயிற்சி கல்லூரியில் முப்படைகளைச்‌ சேர்ந்த அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இது மட்டுமல்லாது, நேச நாடுகளைச்‌ சேர்ந்த பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கும்‌ பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியின் கமாண்டன்ட் பதிவி மிக உயரிய பதவியாக பார்க்கப்படுகிறது.

ராணுவ பயிற்சி கல்லூரி
ராணுவ பயிற்சி கல்லூரி

கமாண்டன்ட்டாக பொறுப்பு வகித்து வந்த லெஃப்டினன்ட் ஜெனரல் கலோனின்‌ பதவிக்காலம் நிறைவடைந்துள்ள‌ நிலையில், புதிய கமாண்டன்ட்டாக தமிழகத்தைச் சேர்ந்த லெஃப்டினென்ட் ஜெனரல் மோகன் பதவி ஏற்றறுக் கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னையில் பிறந்த இவர், பள்ளிப் படிப்பை சென்னையிலேயே பயின்றிருக்கிறார். பின்னர் டேராடூன் இந்தியன் மிலிட்டரி அகாடமியில் ராணுவ பயிற்சியை நிறைவு செய்திருக்கிறார். 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராணுவ விமானப் பாதுகாப்புப் படையில் சேவையைத் தொடங்கியிருக்கிறார்.

 லெஃப்டினென்ட் ஜெனரல் மோகன்
லெஃப்டினென்ட் ஜெனரல் மோகன்

இந்திய ராணுவத்தின் பல்வேறு துறைகளில் தொடர்ந்து 36 ஆண்டுகள் பணியாற்றிய இவர், ஆப்பிரிக்கா சியரா லியோனில் உள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகத்திலும் வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்போடியாவில் இந்தியாவின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பு வகித்து, தற்போது வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியின் கமாண்டன்ட் பொறுப்பை ஏற்றிருக்கிறார். தமிழநாட்டைச்‌ சேர்ந்த ஒவருக்கு கமாண்டன்ட் பதவி வழங்கப்பட்டிருப்பது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism