Published:Updated:

லண்டனில் உள்ள ஜான் சல்லிவன் கல்லறையில் அஞ்சலி செலுத்திய எம்.பி ஆ.ராசா! பின்னணி என்ன?

ஜான் சல்லிவன் கல்லறையில் ஆ.ராசா

மெட்ராஸ் பிரசிடென்சியின் கோடைக்காலத் தலைமையகமாக 1822-ம் ஆண்டு ஊட்டியை அறிவிக்கும் அளவிற்குப் புதிய நகரத்தை நிர்மாணித்திருக்கிறார்.

லண்டனில் உள்ள ஜான் சல்லிவன் கல்லறையில் அஞ்சலி செலுத்திய எம்.பி ஆ.ராசா! பின்னணி என்ன?

மெட்ராஸ் பிரசிடென்சியின் கோடைக்காலத் தலைமையகமாக 1822-ம் ஆண்டு ஊட்டியை அறிவிக்கும் அளவிற்குப் புதிய நகரத்தை நிர்மாணித்திருக்கிறார்.

Published:Updated:
ஜான் சல்லிவன் கல்லறையில் ஆ.ராசா

பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்த காலகட்டத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் ஆட்சியராகப் பதவி வகித்தவர் ஜான் சல்லிவன். பல்வேறு சவால்களை எதிர்கொண்டு முதல் முறையாக நீலகிரி மலையை அடைந்த முதல் ஆங்கிலேயர் என்ற வரலாற்றை உருவாக்கியவர். குளிர்ந்த காலநிலை மற்றும் இயற்கையெழில் நிறைந்த ஊட்டியில் கட்டுமானங்களை எழுப்பி ஆங்கிலேயர்களைக் குடியமர்த்தினார். மெட்ராஸ் பிரசிடென்சியின் கோடைக்காலத் தலைமையகமாக 1822-ம் ஆண்டு ஊட்டியை அறிவிக்கும் அளவிற்குப் புதிய நகரத்தை நிர்மாணித்திருக்கிறார்.

லண்டனில் ராசா
லண்டனில் ராசா

இதனாலேயே நீலகிரியின் தந்தை என ஜான் சல்லிவன் அழைக்கப்படுகிறார். நீலகிரியின் முதல் கலெக்டராகவும் பதவி வகித்தார். 1849-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற இவர், தாய்நாடான இங்கிலாந்து திரும்பினார். 1855-ம் ஆண்டு மரணமடைந்தார்.

ஊட்டி நகரம் உருவாக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில் ஊட்டி 200 என்ற பெயரில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. ஊட்டி மலர்க் காட்சியைத் திறந்து வைக்க வந்த முதல்வர் ஸ்டாலின், ஊட்டியில் ஜான் சல்லிவனின் உருவச் சிலையைத் திறந்து வைத்தார்.

இந்த நிலையில், லண்டன் சென்றுள்ள நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, ஜான் சல்லிவன் கல்லறைக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தியிருக்கிறார். ஜான் சல்லிவனின் கொள்ளுப் போத்தி ஓரியல் சல்லிவன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்.

ஜான் சல்லிவன் கல்லறை
ஜான் சல்லிவன் கல்லறை

இதுகுறித்து ராசா தரப்பில், "ஊட்டியைக் கண்டுபிடித்த ஜான் சல்லிவன் அவர்களின் கல்லறைக்குச் சென்று மலர்தூவி மரியாதை செய்தோம். ஜான் சல்லிவனுடைய கொள்ளுப் பேத்தி ஓரியல் சல்லிவனும் மலர்தூவி மரியாதை செய்தார். ஜான் சல்லிவனுடைய 200வது ஆண்டு நிறைவு விழாவிற்கு அவரது குடும்பத்தினரைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் சார்பாக அழைப்பு விடுத்தோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.