Published:Updated:

அரிய வகை நரம்புத்தளர்ச்சி நோய்; இளம்பெண்ணைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!

நோயாளியை குணப்படுத்திய அரசு மருத்துவர்கள்

மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, `கில்லியன் பாரே சிண்ட்ரோம் (Guillain–Barré syndrome - GBS)’ என்ற அரிய வகை நரம்புத் தளர்ச்சி நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இந்நோய் லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

புதுக்கோட்டை, காந்தி நகரைச் சேர்ந்தவர் குணவதி (42). இவருக்கு, திடீரென இரண்டு கைகளும் கால்களும் முற்றிலும் செயலிழந்து போயிருக்கின்றன. இதையடுத்து, உடனே புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

குணவதியை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, `கில்லியன் பாரே சிண்ட்ரோம் (GuillainBarré syndrome - GBS)’ என்ற அரிய வகை நரம்புத் தளர்ச்சி நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இந்நோய் லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும், உடனே சிகிச்சை அளிக்கவில்லை என்றால் நோயாளிக்கு நரம்புகள் முழுவதும் செயலிழந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் நிலை உருவாகும்.

இந்த நிலையில்தான், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி தலைமையிலான மருத்துவக்குழுவினர், குணவதிக்கு விரைந்து சிகிச்சை அளித்து பழைய நிலைக்குக் கொண்டுவந்திருக்கின்றனர். ஒரு மாதகால தொடர் சிகிச்சைக்குப் பிறகு குணவதி நலமுடன் வீடு திரும்பியிருக்கிறார்.

அரிய வகை நரம்புத்தளர்ச்சி நோய்; இளம்பெண்ணைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!

இதுகுறித்து மருத்துவக் குழுவினரிடம் பேசியபோது, ``நோய்க்கான சிறப்பு சிகிச்சையாக ஐ.வி இம்மியூனோ குளோபுளின் மருந்து ஊசி மூலம் 5 நாள்களுக்கு செலுத்தப்பட்டு, உரிய பிசியோதெரபி, நர்ஸிங்கேர் உள்ளிட்ட இதர சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. அதோடு, சுவாசம், நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. இப்படி, அடுத்தடுத்த தொடர் சிகிச்சைகள் அளித்து வந்தோம்.

பலனாக, குணவதியின் கை மற்றும் கால்களில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. யாருடைய உதவியுமின்றி சாப்பிடுவது, அவரது தேவைகளை அவரே பூர்த்தி செய்துகொள்வது என உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதையடுத்து, அவரை டிஸ்சார்ஜ் செய்திருக்கிறோம். குணவதி தற்போது நலமுடன் இருக்கிறார்.

தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சையை மேற்கொள்ள ரூ.5 லட்சம் வரையிலும் செலவாகும். முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ், இந்தச் சிகிச்சை அந்தப் பெண்ணுக்கு இலவசமாகவே செய்யப்பட்டிருக்கிறது" என்றனர்.