Published:Updated:

வலையில் சிக்கிய ராக்கெட் வடிவ வெடிகுண்டு... அதிர்ச்சியில் மீனவர்கள்! - போலீஸ் விசாரணை

ராக்கெட் வெடிகுண்டு

7-ம் தேதி மீனவர்கள் சென்றுவந்த வலையை எடுத்து அதிலிருந்த பாசிகளை சுத்தம் செய்திருக்கின்றனர். அப்போது, அவர்கள் கையில் வெடிகுண்டு போன்ற பொருள் சிக்கியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன், வடிவேல் ஆகிய இருவரும் கடந்த 4-ம் தேதி, நாட்டுப்படகு மூலம் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் இருவரும் மீன்பிடித்துவிட்டு 6-ம் தேதி கரைக்குத் திரும்பியிருக்கின்றனர். அப்போது வலையில் மாட்டிய மீன், நண்டு உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு வலையைக் கடலில் போட்டுவிட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து, 7-ம் தேதி  மீனவர்கள் சென்றுவந்த வலையை எடுத்து அதிலிருந்த பாசிகளைச் சுத்தம் செய்திருக்கின்றனர். அப்போது, அவர்கள் கையில் வெடிகுண்டு போன்ற பொருள் சிக்கியிருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள், உடனடியாக கடலோர காவல்படை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

வலையில் சிக்கிய ராக்கெட் வடிவ வெடிகுண்டு... அதிர்ச்சியில் மீனவர்கள்! - போலீஸ் விசாரணை

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, இது 11.எ.எம் எம்.ஐ.எல்.எல்.ஜி என்ற ராக்கெட் வடிவ வெடிகுண்டு என்பதும் சுமார் ஒரு அடி நீளமும், ஆறடி விட்டமும் இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த வெடிகுண்டு வெடித்திருந்தால், பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ராக்கெட் வெடிகுண்டைக் கைப்பறிய போலீஸார், பாதுகாப்பான இடத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். வலையில் ராக்கெட் வெடிகுண்டு சிக்கிய சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.