Published:Updated:

திருமண வரவேற்பு நிகழ்ச்சி; திமுக கட்சிக் கொடி நடும் பணி; 13 வயது சிறுவன் பலியான சோகம்!

விழுப்புரம் மேற்கு காவல் நிலையம்
விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் ( தே.சிலம்பரசன் )

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு அமைச்சரை வரவேற்பதற்காக தி.மு.க கட்சி கொடிக்கம்பங்கள் நடும் பணிக்குச் சென்ற 13-வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது இளைய மகன் ராகுல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 13 வயது சிறுவன். விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சிப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது தந்தை குடும்பப் பிரச்சனை காரணமாகப் பிரிந்து சென்றுவிட்டதால், தாயின் அரவணைப்பில் மட்டுமே அந்த சிறுவன் வளர்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலங்களில் பள்ளி இயங்காததாலும், குடும்பத்தின் வறுமையினாலும் கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து வந்துள்ளான் அச்சிறுவன். நேற்று முன்தினம் (20.08.2021) விழுப்புரம் சிக்னல் அருகே மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பொன்குமார் என்பவரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி; திமுக கட்சிக் கொடி நடும் பணி; 13 வயது சிறுவன் பலியான சோகம்!

வரவேற்பு நிகழ்ச்சிக்கு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை அந்த நபர் அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதனால், தி.மு.க கட்சி கொடியை சிக்னலிருந்து, திருமண மண்டபம் வரை நடுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளார் அந்தப் பிரமுகர். இந்த கொடிக்கம்பம் நடும் பணியில், சுமார் 2 மணி அளவில், ராகுல் எனும் இந்த சிறுவனும் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சாலையின் குறுக்கே உயர் மின்னழுத்த கோபுரங்கள் செல்வதால், சாலை ஓரங்களில் உள்ள மின் ஒயர்கள் சற்று தாழ்வாகவே செல்கின்றன. இரும்பால் ஆன கொடிக்கம்பியை நடுவதற்காக உயர்த்தியபோது, மின் இணைப்பில் பட்டு, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார் என்கின்றனர். அங்கிருந்த நபர்கள், அச்சிறுவனை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான் அச்சிறுவன். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தின் காவல் ஆய்வாளர் செல்வராஜிடம் பேசினோம். "தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு அமைச்சரை அழைத்திருப்பார்கள் போல. அதனால், வரவேற்பு நிகழ்ச்சி அன்று உரிமையாளர்கள் மூலம் கட்சி கொடிக்கம்பங்கள் நட்டுள்ளனர். அந்த மாணவன் அங்குள்ள கொடி நடும் கம்பியை எடுத்து விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் தாக்கியுள்ளது. அங்குள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் மாணவர் சிகிச்சை பலரின்றி உயிரிழந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துகொள்ளவில்லை.

ராகுல்
ராகுல்
ஆரணி: கட்டுப்பாட்டை இழந்த கார்; லாரி மோதி விபத்து; கைக்குழந்தை உட்பட 6 பேர் பலியான பரிதாபம்!

174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். அந்த மாணவன் தன் தாயுடன் மட்டுமே வளர்ந்து வந்துள்ளான் போல. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவன் தான். மின் கம்பி உயரம் குறைவாக இருப்பதாக மின்சார துறை அதிகாரிகளிடம் பேசினோம். 'உயர் மின்னழுத்த கோபுரம் மேலே செல்கிறது. விரைவில் சரிசெய்வதாக' கூறியுள்ளனர். " என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`மெட்ராஸ் டே' Quiz

`மெட்ராஸ் டே' Quiz
`மெட்ராஸ் டே' Quiz

நீங்க தஞ்சாவூரா இருக்கலாம், வந்தவாசியா இருக்கலாம், மதுரையா இருக்கலாம். இல்ல... கன்னியாகுமரியாகூட இருக்கலாம். ஆனா, நம்ம எல்லாருடைய லைஃப்லயும் சென்னை கலந்திருக்கும். நாம சென்னையைக் கடந்திருப்போம். அப்படி நம்ம லைஃபோட கலந்திருக்குற சென்னையைப் பத்தி நமக்கு எவ்வளவு தெரியும்? இந்த quiz -ஐ attend பண்ணுங்க!

கலந்துகொள்ள க்ளிக் செய்க - https://bit.ly/3gl7qMl

அடுத்த கட்டுரைக்கு