Published:Updated:

ஓய்வு பெற்ற மோப்ப நாய்; சிவப்பு கம்பளம் விரித்து மலர் தூவி பிரியாவிடை அளித்த CISF வீரர்கள்!

மோப்ப நாய் ராணி

மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் மோப்ப நாய் ராணியை சிவப்பு கம்பளத்தில் அழைத்துச் சென்று பிரியாவிடை அளித்துள்ளனர்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் கடந்த 9 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ராணி என்ற மோப்ப நாய் கடந்த வியாழக்கிழமை அன்று ஓய்வு பெற்றது.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் கடந்த 9 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ராணி என்ற மோப்ப நாய் கடந்த வியாழக்கிழமை அன்று ஓய்வு பெற்றது.

2012-ம் ஆண்டு முதல் சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்த ராணி என்ற மோப்ப நாய் ஒய்வு பெறும் நிலையில் அதற்கு பிரியாவிடை நிகழ்ச்சியை மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் ஏற்பாடு செய்து அதன் பணியை கவுரவித்துள்ளனர். பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை அலுவலகத்தில் டிஐஜி ஸ்ரீராம் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை விமான நிலையத்தின் இயக்குநர் சரத்குமார் கலந்து கொண்டார். எப்போதும் காவல் துறையில் உயர் அதிகாரிகள் ஓய்வு பெறும்போது அவர்களை சக வீரர்கள் சிவப்புக் கம்பளத்தில் அழைத்துச் செல்வது வழக்கம்.

மோப்ப நாய் ராணி
மோப்ப நாய் ராணி

அதே போல சென்னை விமான நிலைத்தில் மோப்ப நாய் ராணியை திறந்த வெளி ஜீப்பில் சிவப்பு கம்பளத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அழைத்து சென்றுள்ளனர். இதுமட்டும் அல்லாமல் ராணிக்கு மலர் மலர் தூவியும் வணக்கம் செலுத்தியும் பிரியாவிடை அழித்துள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மோப்ப நாய் ராணிக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையின் டி.ஐ.ஜி., ஸ்ரீராம் கூறுகையில், "தற்போது சென்னை விமான நிலையத்தில் 9 மோப்ப நாய்கள் பாதுகாப்புப் பிரிவில் பணிபுரிந்து வருகின்றன. தற்போது ராணி ஓய்வுப் பெற்றது எங்களுக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு நானே ராணியை தத்தெடுக்க உள்ளேன்" என்று அவர் கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலானதை அடுத்து பலரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.