Published:Updated:

ஜவ்வு மிட்டாய், சீரக மிட்டாய்.... கோவை மக்களை ஈர்க்கும் `80-ஸ் & 90-ஸ் Kids' மிட்டாய்க் கடை!

80-ஸ் & 90-ஸ் Kids மிட்டாய் கடை
80-ஸ் & 90-ஸ் Kids மிட்டாய் கடை

`குச்சி மிட்டாய் குருவி ரொட்டி' என்ற  நகைச்சுவையை மட்டுமே கேட்டவர்கள் இங்கு வந்தால் அதைச் சுவைத்தும் பார்க்கலாம்!

கோயமுத்தூரில் உள்ள பீளமேடு - அவினாசி சாலையில் அமைந்திருக்கிறது '80'ஸ் & 90'ஸ் பெட்டிக் கடை'. அந்தப் பகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தக் கடையில் விற்கும் மிட்டாய்களுக்கு ஒரு சுவாரஸ்யத் தகவல் உண்டு. குறுகிய காலத்தில் பிரபலமான இந்தக் கடைக்கு காரணம் அங்கு விற்கப்படும் 1980, 1990-களில் விற்கப்பட்ட பல வகை மிட்டாய்கள்தாம். 80, 90-களில் குழந்தைகளாக இருந்தவர்கள் வாங்கிச் சுவைத்த மிட்டாய்களைக் கடையில் விற்றுவருகிறார் உரிமையாளர் காந்தி.

குழந்தைகளை ஈர்க்கும் மிட்டாய் வகைகளை 30 வயது, 40 வயதை எட்டிய பெரியவர்கள் வாங்கிச் சுவைத்துச் செல்கிறார்கள். 1 ரூபாயில் தொடங்கி அதிகபட்சமாக 20 ரூபாய் வரையில் மிட்டாய்கள் விற்கப்படும் இந்தப் பெட்டிக்கடையில் தற்போதைய குழந்தைகளுக்கு அந்தக் கால தின்பண்டங்களை அறிமுகம் செய்வதோடு பெரியவர்களுக்கு நாஸ்டாலஜியைக் கிளப்பிவிடுவதாகச் சொல்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.

80-ஸ் & 90-ஸ் Kids இனிப்பு வகைகள்
80-ஸ் & 90-ஸ் Kids இனிப்பு வகைகள்
ரூத் ஜான்

கடை உரிமையாளர் காந்தியிடம் பேசினோம், "நான் ஒரு 70'ஸ் கிட். அப்போதைய காலம் ஒரு பொற்காலம் போன்றது. இப்போதைய 2k கிட்ஸ் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. 2k கிட்ஸ் வாழ்க்கையில் பலவும் எமோஜிக்குள் அடங்கிவிட்டது.

நான் கோவையைச் சேர்ந்தவன். எங்கள் குடும்பம் 60 வருடங்களாக பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறோம். இந்தக் கடை ஆரம்பித்து 2 வருடங்கள் ஆகின்றன. ஆரம்பத்தில் 80-ஸ் கிட்ஸ், 90-ஸ் கிட்ஸ் மிட்டாய் விற்கவில்லை. தேன்மிட்டாய், கடலைமிட்டாய் போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இப்போது அவை பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஒரு சில பெட்டிக்கடைகளில் மட்டுமே பார்க்க முடிகிறது. அப்போதுதான் எனக்கு இந்தக் கடையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. 80'ஸ் 90'ஸ் மிட்டாய்கள் என்று அறிமுகம் செய்தேன். அவற்றை அறிமுகம் செய்து வெறும் 4 மாதங்களே ஆகின்றன. இருப்பினும் அதிக அளவில் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. 80, 90-களில் பாடல்கள் எத்தகைய இனிமையை மக்களுக்குத் தருகிறதோ அத்தகைய இனிமையை என் கடைக்கு வருவோரிடம் காணமுடிகிறது.

கடைக்கு வந்து செல்வோர் பல வகையான மிட்டாய்களை வாங்கிச் செல்கின்றனர். மீண்டும் தங்கள் பால்யகாலத்து நினைவுகளைத் தருவதாகப் பலர் சொல்லும்போது மனநிறைவாக இருக்கும். அப்போது எல்லா பள்ளிக்கூடம் முன்பும் ஒரு பாட்டி இலந்தவடை , புளிப்பு மிட்டாய், புளிஜாம் போன்ற தின்பண்டக் கடை வைத்திருப்பார். இப்போது அவை பெருமளவில் கிடைப்பதில்லை.

எங்கள் கடையில் விற்கப்படும் மிட்டாய் வகைகளைத் தென் மாவட்டங்களில் குடிசைத் தொழில் செய்பவர்களிடமிருந்து மொத்தமாக வாங்கிக்கொள்வோம். 100 ரூபாய்க்கு இப்போதைய மிட்டாயில் ஒரு சுவையைத்தான் சுவைக்க முடியும்

- - ச.கிருத்திகா; வீடியோ: ரூத் ஜான்.சு பீளமேடு அவினாசி சாலையில் இருக்கும் 80ஸ் 90ஸ் பெட்டிக் கடை பொதுமக்களிடையே அதிக...

Posted by Vikatan EMagazine on Monday, February 24, 2020
80-ஸ் & 90-ஸ் Kids இனிப்பு வகைகள்
80-ஸ் & 90-ஸ் Kids இனிப்பு வகைகள்
ரூத் ஜான்

ஆனால், இங்கு அதே விலைக்குப் பல வகையான மிட்டாய் சுவையை சுவைக்கலாம். நூல் மிட்டாய், சீரக மிட்டாய், இடைக்கல் மிட்டாய், ஜவ்வு மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், பேப்பர் அப்படம், இலந்தவடை, கமர்க்கட்டு போன்ற பல மிட்டாய் வகைகள் இங்கு விற்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் பிறந்தநாளுக்கு மொத்தமாக வாங்கிச் செல்வார்கள். சிலர் குச்சி மிட்டாய், கமர்க்கட்டு, தேன்மிட்டாய் எனக் காம்போ பாக்கெட்டில் வாங்கிச் செல்கின்றனர்.

திரைப்படங்களில் 'குச்சி மிட்டாய் குருவி ரொட்டி' என்ற நகைச்சுவையை மட்டுமே கேட்டவர்கள் இங்கு வந்தால் அதைச் சுவைத்தும் பார்க்கலாம்" என்றார்.

மேலும், "இன்னொரு கடையைக் கோவை பகுதியிலேயே திறக்கலாம் எனத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். இதே '80'ஸ் 90'ஸ் கிட் கடை' பெயரோடு பலவகை மிட்டாய்களையும் அங்கும் சுவைக்கலாம்" எனக் கலகலப்பானார் காந்தி.

80’ஸ் கிட்ஸ், 90’ஸ் கிட்ஸ்.. காதல் கலாட்டா! - வாசகர் பகிர்வு #MyVikatan
அடுத்த கட்டுரைக்கு