Published:Updated:

``சுமப்பேன் சார்; சாகுற வரைக்கும் சுமப்பேன்'' - வாழ்க்கையை நம்பிக்கையால் தைக்கும் டெய்லர் நாகேஷ்

டெய்லர் நாகேஷ்

நாகேஷ் ஒரு தையல் கலைஞர். காலமாற்றத்தின் ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கால ஓட்டத்தில் கரைந்துபோன அத்தனை கலைஞர்களின் சாட்சியாக நடமாடுகிறார் நாகேஷ். 40 ஆண்டுக்கால தன் தையல் வாழ்வில், 17 கிலோ எடையைத் தினமும் 15 கிலோ மீட்டராவது தூக்கிச் சுமக்கும் 58 வயது நம்பிக்கை நாயகன்.

``சுமப்பேன் சார்; சாகுற வரைக்கும் சுமப்பேன்'' - வாழ்க்கையை நம்பிக்கையால் தைக்கும் டெய்லர் நாகேஷ்

நாகேஷ் ஒரு தையல் கலைஞர். காலமாற்றத்தின் ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கால ஓட்டத்தில் கரைந்துபோன அத்தனை கலைஞர்களின் சாட்சியாக நடமாடுகிறார் நாகேஷ். 40 ஆண்டுக்கால தன் தையல் வாழ்வில், 17 கிலோ எடையைத் தினமும் 15 கிலோ மீட்டராவது தூக்கிச் சுமக்கும் 58 வயது நம்பிக்கை நாயகன்.

Published:Updated:
டெய்லர் நாகேஷ்

ஒல்லியான கறுத்த தேகம், ஒட்டிய கன்னங்கள். கனீர் குரல் மட்டுமே பிரதானம். `தையல், தையல்' எனக் கத்திக்கொண்டே தன் சக்திக்கும் மீறி தையல் மெஷினின் எடையைத் தோள்களில் சுமந்துகொண்டு மதுரை வீதிகளில் சிட்டாகப் பறந்து வலம் வந்து கொண்டிருக்கிறார் நாகேஷ்.

நாகேஷ் ஒரு தையல் கலைஞர். காலமாற்றத்தின் ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கால ஓட்டத்தில் கரைந்துபோன அத்தனை கலைஞர்களின் சாட்சியாக நடமாடுகிறார் நாகேஷ். 40 ஆண்டுக்கால தன் தையல் வாழ்வில், 17 கிலோ எடையைத் தினமும் 15 கிலோ மீட்டராவது தூக்கிச் சுமக்கும் 58 வயது நம்பிக்கை நாயகன்.

உச்சி வெயிலில் உருகிக்கிடந்த அவனியாபுரம் தெருக்களில் தனித்துக் கேட்கிறது நாகேஷின் குரல். ``காலையில இருந்து பத்து தெரு நடந்துட்டேன். இப்போதான் முதல் துணி தைக்கப்போறேன்'' எனப் பேசத் தொடங்கினார் நாகேஷ்.

டெய்லர் நாகேஷ்
டெய்லர் நாகேஷ்

``சொந்த ஊரு, இதே மதுரை பக்கத்துல இருக்குற பையனூர் கிராமம். கல்யாணமாகி அவனியாபுரத்துக்குள்ள வந்தேன். டெய்லர் தொழில் புடிச்சுப்போயித்தான் கத்துக்கிட்டேன். அந்தக் காலத்துல கிழிஞ்ச துணி தைக்கிறதுக்குன்னே நிறைய டெய்லர்மார்கள் ஊருக்குள்ள திரிவாங்க. அப்படித்தான் எனக்குனு ஒரு மிஷின ரெடி பண்ணிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சேன். இந்தா... 40 வருஷமாச்சு, அப்படியேதான் போயிட்டு இருக்கு.

நான் துணி தைக்கக் கத்துக்கிட்ட காலத்துல துணி வெட்டித் தைக்கப் பழகிக்கல. கிழிஞ்ச துணி மட்டும் தைச்சுக் குடுத்து பொழப்பு ஓடுச்சு. இப்போ காலம் மாறிடுச்சு. ஆனாலும், யாராச்சும் வேலை சொல்லுவாங்கங்கிற நம்பிக்கையிலதான் நடந்துகிட்டு இருக்கேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எல்லாரும், `ஏன்யா தூக்கி சொமக்குற... ஒரு கடையப் போட்டுக்கலாம்ல?'னு சொல்லுவாங்க. நான் பொறந்தப்போவே என்கூட சேர்ந்து வறுமையும் ரெட்டைப்புள்ளையா பொறந்துருச்சுபோல. தனியா கடை வைக்கணும்னா வாடகைக்கு, அட்வான்ஸுக்கு எல்லாம் முதலீடு வேணும்ல? என்ன நம்பி யாரு கடன் கொடுப்பான்னுதான் ஜனங்கள நம்பி தெருவுல நடக்க ஆரம்பிச்சேன். அதுவே பழகிப்போச்சு.

கூடப்பொறந்த அண்ணன், தம்பின்னு எல்லாரும் இருக்காங்க. நான் வறுமையில இருக்குறதால, வீட்டுக்கு உதவின்னு வந்துருவானோன்னு நினைச்சு யாரும் சேர்த்துக்கிறது இல்ல. நானும் யாருக்கிட்டயும் போயி எதுவும் கேட்டு நிக்குறது இல்ல.

என் பொண்டாட்டி பேரு சாந்தி. எங்களுக்குப் புள்ள இல்ல. நல்லதா போச்சு, இல்லைன்னா அதுவும் எங்களோட சேர்ந்து வறுமையத்தான் பார்த்துருக்கும். வயசு 58 ஆச்சு. இதுவரை யாருகிட்டயும் உதவின்னு போய் நின்னது இல்ல. தினம் இதுல வர்ற வருமானம்தான். நல்ல வருமானம் வந்தா குழம்பு ஊத்தி சோறு சாப்புடுவோம். வருமானம் இல்லையின்னா தண்ணிய ஊத்தி சாப்புட்டுருவோம். வாய்க்கு என்ன ருசி தேவைப்படுது, வயிறு நெறஞ்சா பத்தாதா..?

டெய்லர் நாகேஷ்
டெய்லர் நாகேஷ்

அந்தக் காலத்துல எல்லாம், ஒரு தடவ எடுக்குற பேன்டு, சட்டைய அண்ணன், தம்பி, கடைசித் தம்பினு அந்தக் குடும்பமே தைச்சுத் தைச்சுப் போட்டுக்கும். இப்போவெல்லாம் தையல் விட்டுப் போனாக்கூட தூக்கிப் போட்டுட்டு புதுசு வாங்கப் போயிடுறாங்க. அப்புறம், வீடுகள்லயும் தையல் மிசின வாங்கி வெச்சுக் கிட்டாங்க. ஆனாலும் இதையும் மீறி என் முகத்துக்காக இன்னமும் என்கிட்ட தைக்கிற ஆட்கள் இருக்காங்க, நம்மள பொழைக்க வைக்கவும் நாலு மனசு இருக்கு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு கிழிஞ்ச பேன்ட்டை தைக்க 10 ரூபாயில இருந்து 20 ரூபாய் வரைக்கும் வாங்குவேன். ஒரு நாளைக்கு 150 ரூபாயில இருந்து 200 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். காலையில 10 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்புவேன். மதுரையில ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு தெருன்னு கணக்கு வெச்சு சுத்துவேன்.

மதியான சாப்பாடு சாப்பிட்டா, வயித்துக்கு ஒத்துக்கலைன்னா இந்த மிசின தெருவுல எங்கிட்டும் தனியா வெச்சுட்டுப் போக முடியாதுன்னு மதியான சாப்பாடு சாப்பிடுறது இல்ல. கிடைக்கிற இடைவெளியில டீயோ பன்னோ சாப்பிட்டு வயித்த நிரப்பிக்குவேன். 7 மணி வாக்குல வீட்டுக்குப் போயிருவேன்.

முன்னாடியெல்லாம் புது மனுஷங்க யாராச்சும், ஏதாச்சும் கேட்டா நின்னு பேசுவேன். ஒரு தடவை வேலை முடிச்சுட்டு வீட்டுக்குப் போனப்போ, நாலஞ்சு பேரு குடிச்சுப்புட்டு வந்து கையில இருந்த 150 ரூபாயையும் பறிச்சுட்டுப் போயிட்டாங்க. அதுல இருந்து யார்கிட்டயும் நின்னு பேசத் தயக்கமா இருக்கு. மனுஷன மனுஷன் நம்புறதுக்குக்கூட யோசனையா இருக்கு.

டெய்லர் நாகேஷ்
டெய்லர் நாகேஷ்

இன்னும் எம்புட்டுக் காலத்துக்குத்தான் இப்படி தூக்கி சுமக்கப்போறனு சிலர் கேப்பாங்க. சுமப்பேன் சார், சாகுற வரைக்கும் சுமப்பேன். ஆனாலும் அப்பப்போ பயம் வந்துரும். இந்தக் கொரோனா வந்தப்போ வந்த மாதிரி. லாக்டௌன் காலத்துல எங்கேயும் போக முடியல. அப்பத்தான் கொஞ்சம் பயமாகிப்போச்சு... நமக்கு அப்புறம் நம்ம பொண்டாட்டி என்ன பண்ணாப் போறாளோன்னு. எனக்கு அவளும், அவளுக்கு நானும்னு இருந்துட்டோம். முதியோர்களுக்கான அரசு உதவித்தொகை கிடைச்சா நல்லா இருக்கும்னு தோணுது'' - நமக்கு விடை கொடுத்துவிட்டு, `தையல், தையல்' என்றவாறு நடக்கத் தொடங்கினார்.

கிழிசல்கள் நிறைந்த வாழ்க்கையை நம்பிக்கையால் தைத்துக்கொண்டிருக்கிறார் நாகேஷ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism