Published:Updated:

"யாசகம் வாங்கி 50 லட்ச ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்குக் கொடுத்திருக்கேன்" - யாசகர் பேட்டி

பூல்பாண்டியன்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த யாசகர் "இதுவரையிலும் யாசகம் எடுத்து 50,60,000 ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நான் கொடுத்திருக்கேன்" எனக் கூறி ஆச்சரியப்படுத்தினார்.

"யாசகம் வாங்கி 50 லட்ச ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்குக் கொடுத்திருக்கேன்" - யாசகர் பேட்டி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த யாசகர் "இதுவரையிலும் யாசகம் எடுத்து 50,60,000 ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நான் கொடுத்திருக்கேன்" எனக் கூறி ஆச்சரியப்படுத்தினார்.

Published:Updated:
பூல்பாண்டியன்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த யாசகர் ஒருவரை நிறுத்தி போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர், தான் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குப் பணம் கொடுப்பதற்காக வந்திருப்பதாகச் சொல்லவும், அனைவரின் முகத்திலும் ஆச்சரியம் தொற்றிக்கொண்டது. இதுகுறித்து, யாசகர் பூல்பாண்டியன் பேசுகையில்,"நான் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆலங்கிணற்றைச் சேர்ந்தவன். எனக்குத் திருமணமாகி 2 மகள், 1 மகன் இருக்காங்க. முதலூரில் பிரபல இனிப்புக்கடையில் வேலை பார்த்திட்டிருந்தேன். பிறகு, அங்கிருந்து பம்பாய்க்குப் போய் தேய்ப்புக்கடை நடத்தினேன். அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 15 வருடம் உழவாரப் பணி செஞ்சி என் பிள்ளைங்க எல்லாத்துக்கும் திருமணம் செஞ்சி வச்சேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுக்குப் பிறகு 2010-ல் தமிழ்நாடு வந்துட்டேன். இங்க வந்ததும் குடும்பத்தினர் ஒதுக்க ஆரம்பிச்சதால, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, ராமேஸ்வரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று யாசகம் எடுத்துக் காசு சேர்த்தேன். அப்படி நான் சேர்த்த காசுல ஊருக்கு நாலு நல்லது செஞ்சிருக்கேன்‌.

பூல்பாண்டியன்
பூல்பாண்டியன்

ஊர்ப் பள்ளிக்கூடத்துக்கு நிதி, தேவையான பொருள் வாங்கிக் கொடுத்தேன். அப்புறம் கொரோனா வந்துட்டு‌. அந்தச் சமயத்துல மதுரையில தங்கியிருந்தேன். அதுக்குப்பிறகுதான்‌ கொரோனா நிவாரணத்துக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குக் கொடுக்க ஆரம்பிச்சேன். இப்போ, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிவாரண நிதி கொடுக்க வந்திருக்கேன். இங்கதான், விருதுநகர் மாவட்டம் இருக்கண்குடி கோயிலில் திருவிழாவுக்கு வந்து 15 நாள் தங்கியிருந்தேன். கோயில், வீடு, கடைகள்ல யாசகம் பெற்று பத்தாயிரம் ரூபாய் சேமிச்சு வச்சேன். அந்தக் காசைத்தான் இப்போ மாவட்ட ஆட்சித்தலைவர் கிட்ட இலங்கைத் தமிழர்களுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குக் கொடுக்கப்போறேன். இதுவரைக்கும் ஐம்பது லட்சத்து அறுபதாயிரம் ரூபாயை நிவாரணநிதிக்காகக் கொடுத்திருக்கேன்" என்றார்.