Published:Updated:

8 மணிநேர போராட்டம்... காஸ் சிலிண்டரை திறந்து வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்! - நடந்தது என்ன?

தற்கொலை மிரட்டல்

தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி, காஸ் சிலிண்டரை திறந்துவைத்து கொண்டு தற்கொலை செய்யப் போவதாக ஒரு பெண் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

8 மணிநேர போராட்டம்... காஸ் சிலிண்டரை திறந்து வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்! - நடந்தது என்ன?

தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி, காஸ் சிலிண்டரை திறந்துவைத்து கொண்டு தற்கொலை செய்யப் போவதாக ஒரு பெண் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Published:Updated:
தற்கொலை மிரட்டல்

சென்னை மணலியில் உள்ள ஈ.வே.ரா பெரியார் தெருவில் வசித்து வருபவர் ரேணுகா. இவருடைய கணவர் பெயர் ரமேஷ் கண்ணா. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி மனகசப்பு, குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ரேணுகா தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார். தங்களது வீட்டில் உள்ள மூன்று சமையல் காஸ் சிலிண்டர்களை அருகில் எடுத்து வைத்துக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தி உள்ளார். தகவலறிந்த பதற்றமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையொட்டி, காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்

தற்கொலை மிரட்டல்
தற்கொலை மிரட்டல்

மேலும் அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்து உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் வாகனங்களையும் நிறுத்தி வைத்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் மூலம் சுமூக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போதும் அந்த பெண் அவர்களின் பேச்சுக்கு இணங்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, போராடி அந்த பெண் இருந்த வீட்டின் ஜன்னல்களை உடைத்தனர். கிட்டதட்ட தீயணைப்பு வீரர்கள் 8 மணிநேர போராட்டத்துக்கு பிறகு அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தசம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism