Published:Updated:

ஆவின் ஊழல் புகார்: முதல்முறையாக 34 அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம்; கந்தசாமி ஐ.ஏ.எஸ் அதிரடி!

ஆவின்
ஆவின்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பினாமியாக செயல்பட்டு மிகப்பெரிய ஊழல்களுக்கு காரணமாக இருந்த விற்பனை பொது மேலாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட பொதுமேலாளர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஆவின் முறைகேடுகளுக்கு காரணமாகச் சொல்லப்பட்ட பொது மேலாளர்கள் உட்பட 34 அதிகாரிகளை இடமாற்றி நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின்
ஆவின்

கடந்த ஆட்சிக் காலத்தில் பால்வளத்துறை மீது ஏராளமான புகார்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் நிறுவனங்களில் பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினார்கள். இதற்கெல்லாம் காரணம் அத்துறையின் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜியும் அவருக்கு நெருக்கமான அதிகாரிகளும்தான் என்று சொல்லப்பட்டது.

ஆவின் நிர்வாக இயக்குநர்களாக காமராஜ், வள்ளலார், நந்தகோபால் என வரிசையாக பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பொறுப்புக்கு வந்தும் முறைகேட்டைத் தடுக்க முடியவில்லை. அதிகாரிகள் தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இவர்கள் மீதும் புகார் எழுந்தது.

ஆவின் பால்
ஆவின் பால்
ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1.5 டன் ஆவின் ஸ்வீட்| அடக்குமுறையை நிறுத்தச் சொல்லும் இபிஎஸ்|#Quicklook

இந்நிலையில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் ஆவினில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மாவட்டந்தோறும் சென்று ஆவினில் நடந்த முறைகேடுகளை விசாரித்தார். நந்தகோபால் மாற்றப்பட்டு நிர்வாக இயக்குநராக கந்தசாமி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்ட பின் ஆவின் முறைகேடுகள் மீது நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன.

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யாமல் தனியார்களிடம் பால் கொள்முதல் செய்ததில் பலகோடி ரூபாய் மோசடி, 8 மாவட்டங்களில் பணம் பெற்றுக்கொண்டு 236 பேர் முறைகேடாகப் பணி நியமனம் செய்யப்பட்டதில் நடந்துள்ள மோசடி, அது மட்டுமல்லாமல் தேர்தலுக்கு முன்பு நடந்த பணி நியமன மோசடி, கால்நடைத் தீவனம் கொள்முதலில் நடந்த ஊழல் என கந்தசாமி ஐ.ஏ.எஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார்.

மதுரை ஆவின்
மதுரை ஆவின்

இந்நிலையில் முதல்கட்டமாக முறைகேடுகளுக்கு காரணமாகச் சொல்லப்படும் 17 பொது மேலாளர்கள் உட்பட 34 அதிகாரிகளை இடம் மாற்றி உத்தரவிட்டுள்ளார். இது ஆவின் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, ``ஆவினில் நடந்த முறைகேடுகள் சம்பந்தமாக ஆதாரங்களோடு புதிய அரசிடம் புகார் மனு அளித்திருந்த நிலையில், புதிய நிர்வாக இயக்குநராக கந்தசாமி ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றதும் ஆவினை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

அதில் முதற்கட்டமாக ஆவினுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.18 கோடி வரை இழப்பை ஏற்படுத்தி வந்த சி/எப் ஏஜென்ட் முறையை ரத்து செய்ததோடு, பலகோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு நடைபெற்ற பணி நியமனங்களை ரத்து செய்தும், அது தொடர்பான முறைகேடுகள் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

சு.ஆ.பொன்னுசாமி
சு.ஆ.பொன்னுசாமி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பினாமியாக செயல்பட்டு மிகப்பெரிய ஊழல்களுக்கு காரணமாக இருந்த விற்பனை பொது மேலாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட பொது மேலாளர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஆவின் வரலாற்றிலேயே 34 அதிகாரிகளை மொத்தமாகப் பணியிட மாற்றம் செய்தது இதுதான் முதல் முறை. நடவடிக்கை எடுத்த நிர்வாக இயக்குநருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

அதேநேரம் ஊழல் செய்த அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்யாமல் விசாரணை நடத்தினால் உண்மை வெளிச்சத்துக்கு வராது என்பதையும் நிர்வாக இயக்குநருக்கு கோரிக்கையாக வைக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு