Published:Updated:

`நஷ்டத்தைத் தவிர்க்க உதவுங்கள்!' - வாடிக்கையாளர்களுக்கு ஆவின் விடுத்திருக்கும் கோரிக்கை

Aavin Milk
Aavin Milk ( Photo: Vikatan / Priyanka.P )

ஆவின் பால் பாக்கெட்டுகளை வாங்கி வீடுகளுக்கு விநியோகம் செய்யும் சில நபர்கள், இடம் மாறியவர்களின் மாதாந்திரப் பால் அட்டைகளைப் புதுப்பித்து, தாங்கள் பயனடைந்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக அரசின் ஆவின் நிறுவனம், நஷ்டத்தைத் தவிர்க்கவும் நுகர்வோர்களின் வசதிக்காகவும் பால் அட்டைதாரர்களின் விவரங்களைச் சேகரித்து வருகிறது. அந்த வகையில் நுகர்வோர்களின் வசதிக்காக அட்டைதாரர்கள் தங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்க மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் நீட்டித்துள்ளதாக ஆவின் நிறுவனம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆவின்
ஆவின்
ஆவின் ஊழல் புகார்: முதல்முறையாக 34 அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம்; கந்தசாமி ஐ.ஏ.எஸ் அதிரடி!

தமிழக அரசு, 1985-ம் ஆண்டு முதல் ஆவின் நிறுவனம் மூலம் மாதாந்திரப் பால் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் பால் விற்பனை செய்துவருவதும், இதன் மூலம் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பயன்பெற்று வருவதும் அனைவரும் அறிந்ததே.

மாதாந்திரப் பால் அட்டை மூலம் பால் வாங்கும்போது, கடைகளில் வாங்குவதைவிடப் பாலின் கொழுப்புச்சத்தைப் பொறுத்து லிட்டருக்கு 2 முதல் 3 ரூபாய் வரை குறைவான விலைக்கு வாங்க முடியும். கடந்த மே 16-ம் தேதி முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதும் மக்கள் அறிந்ததுதான்.

இந்நிலையில் ஆவின் நிறுவனம் தன்னுடைய செய்திக் குறிப்பில், ``மாதாந்திரப் பால் அட்டைதாரர்கள் பணியிட மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களுக்காகத் தங்கள் இருப்பிடத்தை மாற்றும்போது, இதுகுறித்த தகவல்கள் ஆவின் நிறுவனத்துக்குத் தெரிய வருவதில்லை. இதனால், ஆவின் பால் பாக்கெட்டுகளை வாங்கி வீடுகளுக்கு விநியோகம் செய்யும் சில நபர்கள், இடம் மாறியவர்களின் மாதாந்திரப் பால் அட்டைகளைப் புதுப்பித்து, தாங்கள் பயனடைந்து வருகின்றனர். அதாவது மானிய விலையில் ஆவின் பாலை வாங்கி ரொக்க விலைக்கு விற்பனை செய்துவருகின்றனர். இதனால், ஆவின் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

ஆவின் இணையதளம்
ஆவின் இணையதளம்
ஆவின் பணி நியமனத்தில் முறைகேடு புகார்|லீக்கான தமிழக மக்களின் ஆதார் தகவல்|கேஸ் விலை உயர்வு#Quicklook

இதைச் சரிசெய்யும் பொருட்டு, கடந்த ஒரு மாத காலமாக அட்டைதாரர்களின் இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், சுமார் 80 ,000 ஆவின் பால் அட்டைதாரர்கள் அவர்கள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கவில்லை என்பது தெரிய வந்திருப்பதோடு, இதன்மூலம் சுமார் 36 லட்சம் ரூபாய் நஷ்டமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நிலை நீட்டிக்க, பால் அட்டைதாரர்கள் தங்களைப் பற்றிய அடிப்படை விவரங்களை ஆவின் நிறுவனத்தின் புதிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து பால் அட்டையைப் புதுப்பித்துக்கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளது.

ஆவின் நிறுவனத்தின் புதிய விண்ணப்பத்துக்கான லிங்க் இதோ:

https://idms-fed.aavin.tn.gov.in/myportal/control/MilkCardsRegistration

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு