Published:Updated:

`விபத்தும் மரணமும் வாடிக்கையாகிவிட்டன! - சிமென்ட் லாரிகளுக்கு எதிராகக் கொதிக்கும் அரியலூர் மக்கள்

விபத்து

சிமென்ட் ஆலைக்குச் செல்லும் லாரிகள் அதிக லோடு ஏற்ற வேண்டும் என்கிற போட்டியால் இதுபோல் தொடர் விபத்துகள் நடக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

`விபத்தும் மரணமும் வாடிக்கையாகிவிட்டன! - சிமென்ட் லாரிகளுக்கு எதிராகக் கொதிக்கும் அரியலூர் மக்கள்

சிமென்ட் ஆலைக்குச் செல்லும் லாரிகள் அதிக லோடு ஏற்ற வேண்டும் என்கிற போட்டியால் இதுபோல் தொடர் விபத்துகள் நடக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Published:Updated:
விபத்து

அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 20 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிமென்ட் ஆலைகளுக்குச் செல்லும் லாரிகளால் விபத்து நடப்பதும், அதில் மக்கள் இறப்பதும் இங்கு வாடிக்கையாகிவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பொதுமக்கள்
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பொதுமக்கள்

அரியலூரிலிருந்து வேணாநல்லூர் கிராமத்துக்கு அரசுப் பேருந்து சென்றபோது காட்டுபிரிங்கியம் என்ற இடத்தில் எதிரே வந்த சிமென்ட் ஆலைக்குச் சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, பேருந்தின் பக்கவாட்டில் மோதி இழுத்துச் சென்றது. இதில் பேருந்தின்‌ முன்பகுதி மற்றும் பக்கவாட்டுப் பகுதி முழுமையாகச் சேதமடைந்தது. இதில், ஐந்து மாணவிகள் உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர். அரசுப் பேருந்து ஓட்டுநர் கொளஞ்சியப்பன் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைத் தேடிவருகின்றனர். இந்நிலையில், டிப்பர் லாரிகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்தும், சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் டிப்பர் லாரிகளைப் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் இயக்காமல் தனிப்பாதையில் இயக்க வேண்டும் என வலியுறுத்தியும் கிராம‌ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்தால் சாலையின் ஓரத்தில் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டன.

அரசுப் பேருந்து
அரசுப் பேருந்து

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேசினோம். ”சிமென்ட் ஆலைகளுக்குச் செல்லும் லாரிகளால் விபத்து நடப்பதும், அதனால், மக்கள் இறப்பதும் இங்கு வாடிக்கையாகிவிட்டது. இதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டக்கோவில் என்னும் இடத்தில் அதிவேகமாக வந்த சிமென்ட் லாரி அரசுப் பேருந்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் இறந்துபோனார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமலும் நான்கு பேர் என ஒன்பதுக்கும் மேற்பட்டோர் இறந்துபோனார்கள். அதேபோல் இன்னும் இரண்டு மூன்று சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சிமென்ட் ஆலைக்குச் செல்லும் லாரிகளால் மக்கள் இறப்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

சிமென்ட் ஆலை!
சிமென்ட் ஆலை!

ஆனால் இன்று வரையிலும் பெரிதாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. ஒரு விபத்து நடந்த பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்கள். அதுவும் அவர்களுக்குச் சேரவேண்டியது சேர்ந்துவிட்டால் அவ்வளவுதான். இதற்கு நிரந்தரத் தீர்வு ஏதாவது செய்திருக்கிறார்களா என்றால் இல்லை. சிமென்ட் ஆலைக்குச் செல்லும் லாரிகள் அதிக லோடு ஏற்ற வேண்டும் என்கிற போட்டியால் இதுபோல் தொடர் விபத்துகள் நடக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் பலர் உயிரிழப்பது தொடந்துகொண்டுதான் இருக்கும்" என்கின்றனர் காட்டமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism