Published:Updated:

வாசகர்களுக்கு வணக்கம்: அரசு தவறு செய்தால் மக்களை தண்டிக்கக்கூடாது!

மின் வாரியம்

இதில் தமிழகம் ரூ.926.11 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கும் மாநிலமாக இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு மாநில மின் வாரியங்கள் சுமார் 90% மின்சாரத்தை இந்தப் பரிவர்த்தனை அமைப்பு மூலமே வாங்குகின்றன.

வாசகர்களுக்கு வணக்கம்: அரசு தவறு செய்தால் மக்களை தண்டிக்கக்கூடாது!

இதில் தமிழகம் ரூ.926.11 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கும் மாநிலமாக இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு மாநில மின் வாரியங்கள் சுமார் 90% மின்சாரத்தை இந்தப் பரிவர்த்தனை அமைப்பு மூலமே வாங்குகின்றன.

Published:Updated:
மின் வாரியம்
தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் 13 மாநிலங்கள், தேசிய மின் பரிவர்த்தனை அமைப்பில் மின்சாரத்தை விற்கவும் வாங்கவும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. பல மாநில மின் வாரியங்கள் சுமார் 5,100 கோடி ரூபாய் கட்டண பாக்கி வைத்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் என்ற மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமே, இந்தியா முழுக்க இருக்கும் பல்வேறு மாநிலங்களின் மின் பகிர்மான அமைப்புகளுக்கு மின்சாரம் செல்வதை உறுதி செய்கிறது. பொதுத்துறை மற்றும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம், உயர் அழுத்த மின்கம்பி வலைத்தடங்கள் வழியே சென்றடைகின்றன.

பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன்
பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன்

ஒரு மாநிலத்தின் மின் தேவை திடீரென அதிகரிக்கும்போது, தேசிய மின் பரிவர்த்தனை அமைப்பிலிருந்து அவசரமாக மின்சாரம் வாங்கிக்கொள்ளலாம். மின் தேவை குறையும்போது, தங்களிடம் இருக்கும் உபரி மின்சாரத்தை விற்கலாம். அவசரத் தேவைகளுக்குக் கொடுக்கல் வாங்கல் செய்துகொள்ளும் மின் சந்தை இது. ஒரு நாள் என்பது 15 நிமிடங்கள் கொண்ட 96 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, எந்த 15 நிமிடத்திலும் மின்சாரத்தை விற்கவோ, வாங்கவோ வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. திடீர் மின்வெட்டு அபாயங்களை மாநிலங்கள் தவிர்ப்பது இதன்மூலம்தான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தப் பரிவர்த்தனை மூலம் மின்சாரத்தை விற்கும் தனியார் நிறுவனங்களுக்கு பல மாநில மின் வாரியங்கள் நிறைய கட்டண பாக்கி வைத்துள்ளன. எனவே, கடந்த ஜூன் மாதம் புதிய விதி ஒன்று கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஒரு மின் உற்பத்தி நிறுவனம் பில் அனுப்பிய இரண்டரை மாதங்களுக்குள், அதற்கான தொகையை மின் வாரியங்கள் செலுத்த வேண்டும். இப்படிக் கட்டணம் செலுத்தத் தவறியதால்தான் இப்போது மின்சாரத்தை விற்கவோ, வாங்கவோ இந்த மாநிலங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியம்
மின்வாரியம்

இதில் தமிழகம் ரூ.926.11 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கும் மாநிலமாக இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு மாநில மின் வாரியங்கள் சுமார் 90% மின்சாரத்தை இந்தப் பரிவர்த்தனை அமைப்பு மூலமே வாங்குகின்றன. இங்கு பரிவர்த்தனை செய்யத் தடை விதிக்கப்பட்டதன் மூலம், திடீர் மின்தடை அபாயம் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. ''சனிக்கிழமைக்குள் இந்த கட்டண பாக்கியை செலுத்தி பிரச்னையைத் தீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்று தமிழக மின் வாரிய அதிகாரிகள் சொல்கிறார்கள். ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டபோதும் மின்வெட்டு அச்சம் உருவானது. அப்போது, 'மத்திய அரசு சொன்னது போல குறிப்பிட்ட அளவு நிலக்கரி கையிருப்பை மாநிலங்கள் வைத்துக்கொள்ளாததே பிரச்னைக்குக் காரணம்' என்று சொல்லப்பட்டது.

மின்சாரம் இல்லாமல் தினசரி வாழ்க்கை நகராது என்ற சூழலுக்கு மக்கள் வந்துவிட்டார்கள். அடிப்படை அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகிவிட்ட மின்சாரத்தை வழங்குவதில் எந்தப் பற்றாக்குறையும் ஏற்படக்கூடாது. கொள்கை முடிவுகள் தொடர்பாக மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் ஏற்படும் மோதல்களில், அரசுகள் செய்யும் தவறால் மக்கள் தண்டிக்கப்படக்கூடாது.