Published:Updated:

எருமை மாடுகள் மீது ஆசிட் வீசி வெறிச் செயல் - மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சி சம்பவம்

எருமைமீது ஆசிட் வீச்சு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே எருமைமீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எருமை மாடுகள் மீது ஆசிட் வீசி வெறிச் செயல் - மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே எருமைமீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
எருமைமீது ஆசிட் வீச்சு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கல்லாறு ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (39). அங்கு ஒரு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவருகிறார். அதன் ஒரு பகுதியாக சுமார் 45 எருமைகள், பசு மாடுகளை வளர்த்துவருகிறார்.

இந்நிலையில், ராஜ்குமார் வளர்த்துவரும் எருமை, பசுக்கள் மீது மர்மநபர்கள் சிலர் ஆசிட் ஊற்றியுள்ளனர். இதில் சுமார் 20 எருமை மாடுகள் உடலில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து ராஜ்குமார் கூறுகையில், “எருமைப் பண்ணை அமைத்து, பால் வியாபாரம் செய்துவருகிறேன். ஆற்றின் கரையோரப் பகுதியில் எருமைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். கடந்த சில நாள்களுக்கு முன்பு மேய்ச்சலுக்குச் சென்று வந்த பல எருமைகள் உடலில் ஆங்காங்கே கொப்பளங்கள் வந்தன.

ராஜ்குமார்
ராஜ்குமார்

நாளடைவில் அவை புண்ணாக மாறி சீழ் வடிந்தது. உடனடியாக கால்நடை மருத்துவரை அழைத்து பரிசோதனை செய்து பார்த்தேன்.

அப்போதுதான் எருமைகள் மீது ஆசீட் ஊற்றியிருப்பது தெரியவந்தது. இதில் சில எருமைகள் சினையாக உள்ளன. கன்று போடும் நிலையில் உள்ள எருமைகள் சரியாகத் தீவனம் சாப்பிடாமல், நடக்கக்கூட முடியாமல் சிரமப்பட்டுவருகின்றன. எருமைகளுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆசிட் வீசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்,